5 சிறுமிளுக்கு பாலியல் தொல்லை! அது என்ன 5 மரண தண்டனை? சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

2024-ம் ஆண்டு 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக போக்சோ வழக்கில் கைதாகி
சிவகங்கை
Published on
Updated on
1 min read

5 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக விறகுவெட்டிக்கு தூக்கு தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புரணி அருகே மருதிப்பட்டி என்கிற பகுதியில் சந்திரன் வசித்து வந்தார். 45 வயதான சந்திரன் விறகு வெட்டியாக வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த 2024-ம் ஆண்டு 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் அதே பகுதியை சேர்ந்த 9 முதல் 10 வயதுள்ள 5 சிறுமிகளை, வீடியோ கேம் விளையாட போன் தருவதாக கூறி தனிமையில் அழைத்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது வெவ்வேறு நேரத்தில் நடந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் திருப்பத்தூர் மகளிர் காவல் துறையினரால் போக்சோ பிரிவில் கைது செய்யப்பட்டார். கடந்த இரண்டு வருடங்களாக நடந்த தீவிர விசாரணையில் சந்திரன் குற்றவாளி என சான்றுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு இன்று சிவகங்கை பாசோ நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டது.

அதனையடுத்து 5 பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 5 தூக்கு தண்டனை வழங்கி நீதிபதி கோகுல் முருகன் தீர்ப்பளித்துள்ளார். மேலும் 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 5 சிறுமிகளுக்கும் அரசு சார்பில் தலா 7 லட்சம் வீதம் 35 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு.

5 மரண தண்டனை என்றால் ஒரு குற்றவாளி பல குற்றங்களைச் செய்திருந்தால் , ஒவ்வொரு குற்றத்திற்கும் தனித்தனியாக அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்படும். இது அந்த குற்றங்களின் தீவிரத்தன்மையைக் குறிப்பதாகும். 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் மிகவும் கேவலமான செயல்களாகக் கருதப்படுகின்றன. இந்தக் குற்றங்களில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அதன்படி இந்த சிவகங்கை வழக்கு போக்சோ பிரிவின் கீழ் வருவதால், குற்றவாளியான சந்திரனுக்கு 5 மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் பல போக்சோ வழக்குகளுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. அதிகபட்ச தண்டனை ஆனா மரண தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.  

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com