“காதலியை கொன்று சடலத்துடன் உடலுறவு” - திருமணமானதை மறைத்து காதல் நாடகம்… சிசிடிவி மூலம் வெளியான காமக்கொடூரனின் முகம்!

வைஷாகன் இளம் பெண்ணை கொல்ல திட்டம் தீட்டி அப்பெண்ணை பட்டறைக்கு அழைத்திருக்கிறார்...
“காதலியை கொன்று சடலத்துடன் உடலுறவு” - திருமணமானதை மறைத்து காதல் நாடகம்… சிசிடிவி மூலம் வெளியான காமக்கொடூரனின் முகம்!
Published on
Updated on
2 min read

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் தடம்பட்டுத்தாளம் பகுதியைச் சேர்ந்தவர் 36 வயதுடைய வைஷாகன் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவர் இலத்தூர் பகுதியில் இரும்பு பட்டறை வைத்து நடத்தி வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 26 வயதுடைய பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில் வைஷாகன் தனக்கு திருமணமானதை மறைத்து அப்பெண்ணுடன் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் காதலிக்க மாறி இருவரும் காதலித்து வந்தனர்.

அப்போது அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி வைஷாகன் அவருடன் பலமுறை தனிமையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வைஷாகனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பதை அறிந்த அப்பெண் இது குறித்து வைஷாகனிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வழக்கம் போல பட்டறைக்கு சென்ற வைஷாகன் இளம் பெண்ணை கொல்ல திட்டம் தீட்டி அப்பெண்ணை பட்டறைக்கு அழைத்திருக்கிறார்.

அதனை தொடர்ந்து பட்டறைக்கு வந்த பெண்ணிடம் “நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது நீ மட்டும் எனக்கு வேணும்” என கூறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வது போல நாடகமாடி உள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண் வைஷாகனை தடுக்க அவருக்கு அருகில் சென்ற போது வைஷாகன் பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார். பின்னர் உயிரிழந்ததை உறுதி செய்த வைஷாகன் அப்பெண்ணின் சடலத்துடன் உடலுறவு வைத்துவிட்டு இச்சை தீர்ந்தவுடன் பெண்ணின் உடலை தற்கொலை செய்து கொண்டது போல தூக்கில் மாட்டி இருக்கிறார்.

பின்னர் எதுவும் தெரியாதது போல தனது மனைவிக்கு போன் செய்து “பட்டறையில் ஒரு பெண்ணின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்” என போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கூறியுள்ளார். அதன்படி வைஷாகன் மனைவி அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில் வைஷாகன் அப்பெண்ணுடன் தகராறில் ஈடுபட்டது தெரிவித்துள்ளது.

எனவே போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் வைஷாகனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் அவர் இளம் பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததும், திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கொன்று அவரது சடலத்துடன் உடலுறவு வைத்ததும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து வைஷாகனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்துள்ளனர். காதலிப்பதாக ஏமாற்றி இளம்பெண்ணை கொன்று சடலத்துடன் உடலுறவு வாய்த்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com