"கழிவறையில் வைத்து மாறி மாறி சீரழிக்கப்பட்ட சிறுமி!" பதின்மவயது சிறுவர்கள் கைது - 'விஷயத்தை மறைக்க' முயற்சித்தாரா சிறுவரின் தாய்?

அச்சிறுமிக்கு தொடர்ச்சியான உள் இரத்தப்போக்கு ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Bangladesh rape case
Bangladesh rape caseBangladesh rape case
Published on
Updated on
2 min read

வங்கதேசம், சுனாம்கஞ்ச் மாவட்டம் தாஹிர்பூர் எல்லை கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தொடர்பாக, 'யபா' என்ற போதைப்பொருளுக்கு அடிமையானதாகக் கூறப்படும் இரண்டு பதின்வயது சிறுவர்களைக் கைது செய்துள்ளதாக வங்கதேச காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, சிறுமியின் பாட்டி சனிக்கிழமை இரவு தாமதமாக உள்ளூர் காவல் நிலையத்தில் அந்த இரண்டு பதின்ம வயது இளைஞர்களின் பெயரைக் குறிப்பிட்டு வழக்கு பதிவு செய்துள்ளார். 'யபா' என்பது மெத்தம்பெட்டமைன் மற்றும் காஃபின் ஆகியவற்றின் கலவையாகும், இது வங்காளதேசம் முழுவதுமே ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளதாக கூறப்படுகிறது.

சுமார் 13 அல்லது 14 வயதுடையவர்கள் என நம்பப்படும் அந்தச் சிறுவர்கள், கோலகான் எல்லைக் கிராமத்தின் மேற்கு பாரா பகுதியில் வசித்து வருகின்றனர். சுனாம்கஞ்ச் காவல் கண்காணிப்பாளர் (SP) ஏபிஎம் ஜாகிர் ஹொசைன், அந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை ஞாயிற்றுக்கிழமை மாலை அன்று உறுதிப்படுத்தியுள்ளார். விசாரணையை விரைவாக முடித்து, கூடிய விரைவில் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு விசாரணை அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வழக்கு அறிக்கையின்படி, இந்தத் தாக்குதல் கடந்த வியாழக்கிழமை மாலை நிகழ்ந்துள்ளது. மஜ்னு மற்றும் கமல் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) என அடையாளம் காணப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள், அக்குழந்தையை அவரது வீட்டிலிருந்து கடத்திச் சென்று, வெஸ்ட் பாராவில் உள்ள ஒரு கழிப்பறையில் அடைத்து வைத்து, அவரை ஒருவர்பின் ஒருவராக மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. வீட்டிற்கு வந்த பிறகு, அந்தச் சிறுமி நடந்ததை தனது குடும்பத்தினரிடமும், அண்டை வீட்டார் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதன் பிறகு அச்சிறுமிக்கு தொடர்ச்சியான உள் இரத்தப்போக்கு ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று, சந்தேக நபர்களில் ஒருவரின் தாய், இரத்தப்போக்கை நிறுத்தும் முயற்சியாக, அந்தச் சிறுமியை கோலகான் சந்தையில் உள்ள ஒரு உள்ளூர் கிராமத்து மருத்துவரிடம் அழைத்துச் சென்று 400 டாக்கா மதிப்புள்ள மருந்தை வாங்கியதாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபரின் தாயும், புருஜ் என்றும் அழைக்கப்படும் உள்ளூர் மருத்துவரான பஷீர் அகமதும், அந்தக் குடும்பம் அரசு மருத்துவமனைக்குச் செல்வதையோ அல்லது இவ்விஷயத்தைக் காவல்துறையிடம் கொண்டு செல்வதையோ தடுக்க முயன்றதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கேட்டபோது, பஷீர் அகமது, இரத்தப்போக்கை நிறுத்த அந்தப் பெண்ணுக்கு மருந்து கொடுத்ததை ஒப்புக்கொண்டார். ஆனால், எந்தக் குற்றத்தையும் மூடிமறைக்க நினைக்கவில்லை என்று குறி மறுத்துள்ளார். "இரத்தப்போக்கை நிறுத்த நான் அடிப்படை மருந்துகளை மட்டுமே வழங்கினேன். கூட்டுப் பாலியல் வன்புணர்வு பற்றி எனக்கு எதுவும் தெரியாது, மேலும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் சட்ட உதவி பெறுவதை நான் ஒருபோதும் தடுக்கவில்லை," என்று பஷீர் கூறியதாக 'கண்ட்ரி டுடே' செய்தி வெளியிட்டுள்ளது.

சனிக்கிழமை பிற்பகலில், தொடர்ச்சியான இரத்தப்போக்கினால் சிறுமியின் நிலை மோசமடைந்ததால், உள்ளூர்வாசிகள் தலையிட்டு, அவரை கோலகான் கிராமத்திலிருந்து அழைத்து வந்து, அவசர மருத்துவ சிகிச்சை மற்றும் சட்ட உதவிக்காக தாஹிர்பூர் சுகாதார வளாகத்திற்கும் காவல் நிலையத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர். ஞாயிற்றுக்கிழமையன்று, விசாரணை அதிகாரி மஜ்னு மற்றும் கமலை சுனாம்கஞ்ச் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அங்கு, அவர்களை காஜிபூரில் உள்ள சிறுவர் மேம்பாட்டு மையத்திற்கு அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com