“அந்த ஆளை நீ காதலிக்கக் கூடாது..” 25 ஆண்டுகள் ஒரே அறைக்குள் அடைக்கப்பட்ட மகள்.. மொட்டை கடுதாசியால் வெளிவந்த பகீர் உண்மை!

காதலித்த ஒரே காரணத்திற்காக, அவர் தன் சொந்தத் தாயாலேயே சிறை வைக்கப்பட்டிருந்தார்
Blanche Monnier story
Blanche Monnier story
Published on
Updated on
4 min read

germanஇந்தியாவில்தான் காதலித்தால் ணவக்கொலை செய்வார்கள் அல்லது பெண்களை வீட்டிலேயே பூட்டிவைத்து விடுவார்கள்; ச்சே.. என்ன கொடூரம் என நீங்கள் நினைத்தால், இந்த உண்மை நிகழ்வு உங்கள் கண்ணோட்டத்தையும், எண்ணத்தையும் மாற்றலாம்.

1901 ஆம் ஆண்டு மே மாதம், பிரான்சின் பொய்ட்டியர்ஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற, செல்வாக்குமிக்க மோனியர் என்ற குடும்ப பெயர் கொண்ட குடும்பம் வசித்து வந்தது. இந்த குடும்பத்தினர் அதிர்ச்சியூட்டும் ரகசியத்தைக் காத்து வருவதாக கூறும் ஒரு விசித்திரமான கடிதத்தை பாரிஸ் தலைமை வழக்கறிஞர் ஒருவர் பெற்றுள்ளார். அந்தக் கடிதத்தின்படி, ஒரு "திருமணமாகாத பெண்" 25 ஆண்டுகளாக மோனியர் இல்லத்திற்குள் சிறைபிடிக்கப்பட்டு, தன்னுடைய கழிவுகளுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்தச் சிறைக்கைதிதான் பிளான்ச் மோனியர் என்று அந்த கடிதத்தில் எழுதியிருந்தது.

அடையாளம் தெரியாத அந்த எழுத்தாளர் தன்னுடைய கடிதத்தில் இதனை குறிப்பிட்டிருந்தார். அதுவரை, மோனியர் என்பது குடும்பம் மிகச் சிறந்த நற்பெயரை சமூதாயத்தில் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. உடனடியாக அந்த தலைமை வழக்கறிஞர் அவர் உடனடியாக இந்த வழக்கை விசாரிக்க முடிவு செய்தார். உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன் பின்னர், மோனியர் குடும்பத்தின் வீட்டிற்குள் காவல்துறை அதிகாரிகள் பார்த்தது பிரான்ஸையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

France shocking true story
France shocking true story

ஒரு காலத்தில் வெளிநாட்டில் இருப்பதாகக் கருதப்பட்ட மோனியர் குடும்ப உறுப்பினரான பிளான்ச் மோனியர், கால் நூற்றாண்டு காலமாக அந்த வீட்டில் பூட்டப்பட்ட ஒரு அறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்தது. ஒரு காலத்தில் துடிப்பான சமூகப் பிரமுகராக இருந்த பிளான்ச், இப்போது ஆபத்தான அளவுக்கு உடல் எடை குறைந்து, உடல் முழுவதும் மலத்தால் மூடப்பட்டு, அழுகிய உணவு மற்றும் பூச்சிகளால் சூழப்பட்டிருந்தார். இதற்கு காரணம், தன் குடும்பத்தினர் விரும்பாத ஒரு ஆணைக் காதலித்த ஒரே காரணத்திற்காக, அவர் தன் சொந்தத் தாயாலேயே சிறை வைக்கப்பட்டிருந்தார் என்ற அதிர்ச்சி உமியும் வெளிவந்தது. போலீசார் மோனியர் இல்லத்திற்கு வந்தபோது, ​​அவர்களுக்குச் சில சந்தேகங்கள் இருந்துள்ளது.

திருமதி லூயிஸ் மோனியரின் பாரிஸ் நகரத்தின் உயர்மட்ட சமூகத்தில் மிகவும் முக்கியமான ஒருவர். இவர் சமூகத்தோடு செய்வதால் மக்களிடையே இன்னும் பிரபலமாகவே அறியப்பட்டார். லூயிஸ் மோனியரின் மறைந்த கணவர் ஒரு பெரிய நிறுவனத்தின் பொறுப்பாளராக இருந்துள்ளார். மேலும், அத்தம்பதியரின் மகன் மார்செல், சட்டப் பட்டதாரியாக இருந்ததோடு, புஜெட்-தேனியர்ஸ் கம்யூனில் நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். அத்தம்பதியருக்கு 1849-ல் பிறந்த பிளான்ச் மோனியர் என்ற மகளும் இருந்தார்.

French News papaer
French News papaer

பிளான்ச் பெரும்பாலும் “மிகவும் மென்மையானவர் மற்றும் நல்ல குணம் கொண்டவர்” என்று சமூகத்தால் வர்ணிக்கப்பட்டார். மேலும், பிளான்ச் பார்ப்பதற்கு மிகவும் வசீகரமான முகத்தோற்றத்துடனும் இருந்துள்ளார். அதனால், அவருக்கு வயது ஆக ஆக பல ஆண்கள் அவரை திருமணம் செய்ய ஆசைகொண்டுள்ளனர். மேலும், சமூகத்தில் அவரது குடும்பத்திற்கு இருந்த மதிப்புமிக்க இடத்தைக் கருத்தில் கொண்டு, அவர் அடிக்கடி பொதுமக்களின் பார்வையில் இருந்துவந்துள்ளார்.

இந்த நிலையில்தான், 1876-ல் ஒரு நாள், பிளான்ச் மோனியர் திடீரெனக் காணாமல் போயுள்ளார். லூயிஸ் மோனியர் தனது மகள் "வெளி ஊருக்கு சென்றுவிட்டாள்" என்று பார்க்கும் மக்களிடமெல்லாம் குறிவந்துள்ளார். காலம் செல்லச் செல்ல, குடும்பத்திற்கு அறிமுகமான பலர்,பிளான்ச் எங்கோ வெளிநாட்டில் குடியேறிவிட்டதாகக் கருதி, மோனியர் குடும்பத்திடம் அவரைப் பற்றிக் கேட்பதை முற்றிலுமாக நிறுத்தியுள்ளனர்.

ஆனால், பிளான்ச் தன் சொந்த வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டிருந்தார் என்பது அவர்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. இருபது ஆண்டுகளுக்கும் மேலாகக் கடந்த பின்னரே, பாரிஸின் தலைமை வழக்கறிஞருக்கு எழுதப்பட்ட ஒரு பெயர்குறிப்பிடாத கடிதம் ஒன்று அவரது வாழ்க்கையை மாற்றியது. அந்த கடிதத்தில், "மாண்புமிகு தலைமை வழக்கறிஞர் அவர்களே: மிகவும் கடுமையான ஒரு சம்பவம் குறித்து உங்களுக்குத் தெரிவிப்பதில் நான் பெருமை கொள்கிறேன். நான் குறிப்பிடுவது, திருமதி மோனியரின் வீட்டில் அடைக்கப்பட்டு, அரைப் பட்டினியாக, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக அழுகிய படுக்கை விரிப்புகளின் மீது வாழ்ந்து வரும் ஒரு திருமணமாகாத பெண்ணைப் பற்றி. சுருக்கமாகச் சொன்னால், தன் சொந்த அசுத்தத்திலேயே அவள் வாழ்ந்து வருகிறாள்" என்று மற்றும் எழுதியிருந்துள்ளது.

german news paper
german news paper

1901-ல் அதிகாரிகள் மோனியர் வீட்டிற்கு வந்தபோது, ​​அந்தக் குடும்பத்தினர், குறிப்பாக லூயிஸ் மோனியர், அதிகாரிகள் அங்கு இருப்பதை விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிந்துள்ளது. அதனால், புலனாய்வாளர்கள் அந்த வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைய வேண்டியிருந்தது. மேலோட்டமாகப் பார்க்கையில், அந்த வீட்டில் எதுவும் தவறாகத் தெரியவில்லை. ஆனால், விசாரணையில், மாடியில் இருந்து ஒரு துர்நாற்றம் வருவதை காவலர்கள் கவனித்துள்ளனர். குறிப்பாக ஒரு கதவில் அந்த நாற்றம் மிகவும் கடுமையாக இருந்துள்ளது. மேலும், அந்தக் கதவு பூட்டப்பட்டிருந்தது.

உள்ளே என்ன இருக்கிறது என்பதை எதிர்பார்க்காமல், காவலர்கள் அந்த அறைக்குள் நுழைந்துள்ளார்.அறையின் ஒரே ஜன்னல் மூடப்பட்டு, தடிமனான திரைகளால் மூடப்பட்டிருந்ததால், அறை கும்மிருட்டாக இருந்துள்ளது. வெளிச்சம் உள்ளே பாய்ந்தபோது, ​​தரையில் சிதறிக் கிடந்த அழுகிய உணவுத் துண்டுகளாலும், பயங்கரமான துர்நாற்றம் வீசியதை அதிகாரிகள் கண்டனர். அதில் மெலிந்துபோன ஒரு பெண் படுத்திருந்தார். அந்தப் பெண் பிளான்ச் மோனியர்.

அன்று காவல்துறை அதிகாரிகள் அறைக்குள் புகுந்து, மூடப்பட்டிருந்த ஜன்னலைத் திறந்தபோது, ​​இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பிளான்ச் மோனியர் சூரியனைக் கண்டது அதுவே முதல் முறையாகும். பிளான்ச் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால், உடல் கடுமையாக மெலிந்து, அறையில் பூச்சிகளும் அழுகிய உணவும் சூழ, தன் சொந்த கழிவுகளிக்கு இடையிலேயே கிடக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளர்.

பிளான்ச் இன்னும் உயிருடன் இருந்தது நம்ப முடியாததாக அதிகாரிகளுக்கு இருந்துள்ளது. உண்மையில், அழுக்கு மற்றும் அழுகல் நாற்றம் புலனாய்வாளர்களை மிகவும் ஆட்கொண்டதால், அவர்களால் அந்த அறையில் சில நிமிடங்களுக்கு மேல் இருக்க முடியவில்லை. சுமார் 25 ஆண்டுகளாக அந்த அறையில் இருந்தும் பிளான்ச் எப்படியோ உயிர் பிழைத்திருந்தார்? என்பது அவர்களுக்கு கிட்டத்தட்ட நம்ப முடியாததாகவே இருந்துள்ளது.

Covered by news paper
Covered by news paper

பின்னர், சில அதிகாரிகள் மீட்கப்பட்ட பிளான்ச் மோனியரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். மற்றவர்களோ அவரது தாயையும் சகோதரரையும் கைது செய்தனர். பிளான்ச் மிகவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும், அவர் குறிப்பிடத்தக்க தெளிவுடன் இருந்ததாகவும், மீண்டும் தூய்மையான காற்றைச் சுவாசிப்பது எவ்வளவு "அருமையாக" இருக்கிறது என்று கூடக் குறிப்பிட்டதாகவும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே திருமதி லூயிஸ் மோனியர், பல ஆண்டுகளுக்கு முன்பே தன் மகள் ஒரு மணமகனைக் கண்டுபிடித்துவிட்டதாக ஒப்புக்கொண்டார். ஆனால், அது குடும்பத்தினருக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளர். அந்த மணமகன் ஒரு இளம், செல்வந்த பிரபுவாக இல்லாமல், பணமில்லாத ஒரு வயதான வழக்கறிஞராக இருந்துள்ளார். பிளான்ச் தாய், இன்னும் பொருத்தமான ஒரு கணவரைத் தேர்ந்தெடுக்குமாறு வற்புறுத்தியபோதிலும், பிளான்ச் மோனியர் தன் கனவு நாயகனைக் கைவிட மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் கொண்ட திருமதி மோனியர் தன் மகள் தன்னுடைய வார்த்தைக்கு இணங்கும் வரை அவரை பூட்டிய அறையில் அடைத்து வைத்துள்ளார். ஆண்டுகள் கடந்தன, ஆனால் பிளான்ச் மோனியர் அவரது தாயின் வார்த்தைக்கு பணிய மறுத்தார். 1885-ல் பிளான்ச் காதலன் இறந்துபோனார். பிளான்ச்சின் சகோதரன் அவருடைய சகோதரிக்கு உதவவில்லை. இறுதியில் அவர் தன் தாயுடன் கூட்டுச் சதி செய்ததாகக் குற்றம் சட்டப்பட்டார்.

பிளான்ஷின் மீட்புக்கு வித்திட்ட அந்தக் கடிதத்தை எழுதியவர் யார் என்பது இன்று வரை தெரியாத மர்மமாகவே உள்ளது. ஒரு வதந்தியின்படி, குடும்பப் பணியாளர் ஒருவர் அந்த ரகசியத்தை பிளான்சின் காதலனிடம் தவறுதலாகக் கூறிவிட, அதனால் பேரதிர்ச்சி அடைந்த அவர், தலைமை வழக்கறிஞருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி கூறியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அந்தப் பயங்கரக் கதை விரைவில் பொதுமக்களிடையே பரவியது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக திருமதி மோனியர் கடுமையான இதய நோய்களால் அவதிப்பட்டார். தன் மகள் விடுதலை செய்யப்பட்ட 15 நாட்களுக்குப் பிறகு அவர் மரணமடைந்தார்.

துரதிர்ஷ்டவசமாக, அந்தக் குற்றங்களுக்காகப் பதிலளிக்க உயிருடன் இருந்த மோனியர் குடும்பத்தின் ஒரே உறுப்பினர் பிளான்ஷின் சகோதரரான மார்செல் மட்டுமே. தனது விசாரணையின் போது, ​​பிளான்ஷ் ஆரம்பத்திலிருந்தே தனது அறையை விட்டு வெளியேற விரும்பவில்லை என்றும், பிளான்ச் அங்கேயே தங்குவதைத் தேர்ந்தெடுத்தார் என்றும் மார்செல் வாதிட்டார். மார்செல் மோனியர், தன் தாயின் குற்றங்களில் ஈடுபட்டதற்காக 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால், பிளான்ச் மோனியர் மீட்கப்பட்ட பிறகு மீண்டும் ஒரு இயல்பான வாழ்க்கையை அவரால் வாழவே இல்லை. காலப்போக்கில் அவரிடம் ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டாலும், அந்த சமபவத்தினால் உளவியல் பாதிப்பு ஏற்பட்டு அவரால் மீண்டும் சமூகத்திற்குத் திரும்ப முடியவில்லை. அவர் தனது வாழ்நாளின் எஞ்சிய நாட்களை ஒரு சுகாதார நிலையத்தில் கழித்து, 1913-ம் ஆண்டு தனது 64-வது வயதில் காலமானார். இந்த நிகழ்வானது பிரான்ஸை மட்டுமின்றி உலகையே உலுக்கியது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com