கேரள மாநிலம் மன்னந்தலா கிராமத்தைச் சேர்ந்தவர் சாயிபு. இவருக்கு 42 வயதில் சம்சத் என்ற மகனும் 33 வயதில் சபீனா என்ற மகளும் உள்ளனர். சபீனாவிற்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்த நிலையில் தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து தனது தந்தை வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.
இவரது அண்ணன் சம்சத் மீது சுற்றுவட்டார காவல் நிலையங்கள் அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த வாரம் மீண்டும் ஒரு சண்டையில் சம்சத் தாக்கிய நபர் உயிருக்கு போராடிய நிலையில் சம்சத்தை கைது செய்ய தேடிவந்தனர். இதனை அறிந்த சம்சத் தனது தந்தை மற்றும் தங்கையுடன் மொத்தமாக தங்களின் சொந்த வீட்டை காலி செய்துள்ளார்.
பின்னர் அருகில் இருந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளனர். தங்கையின் வாழ்க்கையை எப்படியாவது சரி செய்து விட வேண்டும் என சம்சத் முயற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை(ஜூன் 21) காலை சாயிபு வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். சம்சத்தும் ஏதோ ஒரு வேலைக்காக வீட்டை விட்டு கிளம்பியுள்ளார்.
இரவு வேலை முடிந்து வந்த சாயிபு சபீனாவின் நிலையை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். வீட்டின் ஹாலில் ரத்த வெள்ளத்தில் மிதந்து உயிரிழந்து கிடந்துள்ளார். உடனடியாக இது குறித்து சாயிபு போலீசில் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர்.
அதில் சனிக்கிழமை காலை சபீனாவின் அண்ணன் சம்சத் தனது நபர் விஷத் உடன் வீட்டுக்கு வந்து சென்றது பதிவாகி இருந்தது. பின்னர் போலீசார் தலை மறைவாக இருந்த சம்சத் மற்றும் விஷத்தை கைது செய்து விசரனை மேற்கொண்டனர். விசாரணையில் அன்று காலை சம்சத் வீட்டிற்கு வந்த போது சபீனா ஏதோ ஒரு இளைஞருடன் வீடியோ கால் பேசி கொண்டு இருந்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த சம்சத் “எவன் கூட பேசிட்டு இருக்க புருஷன் விட்டு போனாலும் திருந்தமாட்டிய” என தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் சபீனா மற்றும் சம்சத்திற்கு வாக்குவாதம் முற்றி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சம்சத் சபீனாவை சரமாரியாக அடித்து கீழே தள்ளியுள்ளார். பலத்த காயமடைந்த சபீனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை அறிந்து சம்சத் விஷத்தும் தப்பி சென்றது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து சம்சத் மற்றும் விஷத்தை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். யாரிடமோ வீடியோக்கள் பேசிய உடன் பிறந்த தங்கையை அண்ணனே கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.