
ஹரியானா மாநிலம் ரோத்தக் மாவட்டத்தை சேர்ந்தவர் அஜய். இவர் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திவ்யா என்பவரை சமூக வலைதளத்தின் மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு தற்போது நான்கு வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், அஜய்க்கு திவ்யாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருப்பது தெரியவந்துள்ளது.
திவ்யா தனது முதல் கணவரை முறையாக விவாகரத்து செய்யாமல் அஜயை திருமணம் செய்து கொண்டுள்ளார். இருப்பினும் அஜய் திவ்யாவிடம் இதை வைத்து சண்டையில் தனது மகனின் எதிர்காலத்திற்காக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். வேலைக்கு செல்கிறேன் என அடிக்கடி வெளியில் செல்லும் செல்லும் திவ்யா சில நேரங்களில் ஓரிரு நாட்கள் வீட்டிற்கே வராமல் இருந்துள்ளார்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திவ்யாவிற்கு அதே பகுதியை சேர்ந்த காவல் அதிகாரி தீபக் என்பவருக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருப்பது அஜய்க்கு தெரியவந்துள்ளது. இதை பற்றி திவ்யாவிடமும் தீபக்கிடமும் அஜய் கேட்டுள்ளார். அதற்கு தீபக் இதை பற்றி வெளியில் சொன்னால் குழந்தையை கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அஜய் எதுவும் செய்ய முடியாமல் திவ்யாவோடு வசித்து வந்துள்ளார்.
திவ்யா மற்றும் தீபக் இருவரும் அஜய்க்கு மனதளவில் பல காயங்களை ஏற்படுத்தியுள்ளனர். தீபக்கின் பதவி உயர்விற்காக திவ்யா அஜய் இடம் 5 லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். அதை ஏற்பாடு செய்து கொடுத்த அஜய் மீண்டும் பணம் கேட்டதால் தனது நகைகளை விற்று மேலும் 2 லட்சம் கொடுத்துள்ளார். மேலும் திவ்யா பணம் கேட்ட போது “என்னிடம் பணம் இல்லை” என கூறியுள்ளார் அஜய்.
அதற்கு திவ்யா அஜயை அவரது தந்தையை கொன்று அவரது சொத்துக்களை விற்று பணம் தருமாறு நெருக்கடி கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தனது கள்ளக்காதலனுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த அஜய் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சமூக வலைத்தளங்களில் திவ்யா மாற்றும் தீபக் பற்றி பேசி வீடியோ பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் “ எனது மரணத்திற்கு திவ்யா மற்றும் அவரது கள்ளக்காதலன் தீபக் மட்டும் தான் காரணம் அவர்களால் எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது. தீபக்கின் பதவி உயர்விற்காக நான் நிறைய பணம் கொடுத்துள்ளேன் அதற்கான ஆதாரங்கள் எனது வீட்டில் பைலில் உள்ளது. அந்த பணத்தை எனது பெற்றோருக்கு வாங்கி கொடுத்து விடுங்கள்.
எனது தந்தை திவ்யா கொலை செய்ய சொல்லி என்னை துன்புறுத்தினார். என் தந்தையை என்னால் கொல்ல முடியாது. எனவே நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன். எனது மகனை நான் இறந்த பிறகு எனது பெற்றோர்களிடம் ஒப்படைத்து விடுங்கள்” என கூறியுள்ளார்.
மேலும் வீடியோவின் இறுதியில் “பெண்கள் தவறு செய்து விட்டு கண்ணீர் சிந்தினால் அவர்கள் சொல்வதை சமூகம் உண்மை என நம்பி விடுகிறது. ஆனால் ஒரு ஆண் எதுவும் செய்ய முடியாமல் தனது உயிரை இழக்கிறான். தயவு செய்து ஆண்களுக்கு ஏதாவது செய்யுங்கள்” என கூறியுள்ளார். வீடியோ பார்த்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்த கிடந்த அஜயின் உடலை கைப்பற்றியுள்ளனர். மேலும் திவ்யா மற்றும் தீபக் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.