

விழுப்புரம் மாவட்டம், வானுார் கிராமத்தை சேர்ந்தவர் 32 வயதுடைய வாணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வாணி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை பிரிந்து இரண்டு மகன்களுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது தாய் இறந்து விட்ட நிலையில் வாணிக்கு அச்சரம்பட்டு கிராமத்தை சேர்ந்த 42 வயதுடைய சூர்யா, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
வாணியும் சூர்யாவும் தொடர்ந்து நெருங்கி பழகி வந்த நிலையில் இருவருக்கும் இடையே திருமணத்திற்கு மீறிய உறவு ஏற்பட்டு வாணி சூர்யாவுடன் ஒரே வீட்டில் கணவன் மனைவி போல வசித்து வருவதாக சொல்லப்படுகிறது. வாணியின் தம்பியான 29 வயதுடைய சேட்டு குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்திருக்கிறார் எனவே வாணி அவருக்கு திருமணம் செய்து வைத்தால் திருந்துவிடுவார் என எண்ணி தம்பிக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார். இருப்பினும் குடிப்பழக்கத்தை கைவிடாத சேட்டு தினந்தோறும் குடித்துவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.
எனவே சேட்டுவின் மனைவி அவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனது அக்காவிற்கு போன் செய்த சேட்டு “இங்க நான் சாப்பாடு செஞ்சு கொடுக்க கூட யாரும் இல்லாமல் கஷ்டப்பட்டுட்டு இருக்க” என தனது அக்காவிடம் புலம்பியுள்ளார். இதனால் தனது தம்பியை நினைத்து வருத்தமடைந்த வாணி சேட்டுவை பார்க்க அவரது வீட்டிற்கு நேரில் சென்றார். அங்கு குடிபோதையில் இருந்து சேட்டுவிற்கு அறிவுரை கூறிவிட்டு சமைக்க சமயலறைக்கு சென்றுள்ளார்.
அப்போது முழு போதையில் இருந்த சேட்டு தனது அக்காவை பின் தொடர்ந்து சென்று தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனால் வாணி “நான் உன் அக்கா” என சேட்டுவை கண்டித்துள்ளார். எதையும் காதில் வாங்காத சேட்டு அங்கிருந்த சேலையை எடுத்து வாணியின் கைகால்களை கட்டி அவரை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் தனது தம்பியிடமிருந்து தப்பித்து வந்த வாணி இது குறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சேட்டை கைது செய்தனர். உடன்பிறந்த அக்காவை தம்பி பாலியல் வன்கொடுமை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.