“கைதியுடன் உல்லாசத்தில் இருந்த சிறை அதிகாரி” - இங்கிலாந்து சிறையில் அடுத்தடுத்து நடக்கும் சட்டவிரோத செயல்கள்!

இதனை அறிந்த காவல் துறையினர் பெண் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்த நிலையில் மேலும் இதே பெண் அதிகாரி வேறு ஓரு அரசு அலுவலகத்திலும்...
“கைதியுடன் உல்லாசத்தில் இருந்த சிறை அதிகாரி” - இங்கிலாந்து சிறையில் அடுத்தடுத்து நடக்கும் சட்டவிரோத செயல்கள்!
Published on
Updated on
1 min read

தவறு செய்தவர்கள் தண்டனை கொடுக்கவும் அவர்களை தவறுகளை உணர்ந்து திருந்துவதற்கும் வழங்கப்படுவது தான் சிறை தண்டனை, எனவே சிறையில் இருக்கும் காவலர்களும் அதிகாரிகளும் கைதிகளிடம் கண்டிப்பான முறையில் தான் நடந்து கொள்வார்கள். ஆனால் இங்கிலாந்தில் உள்ள ஒரு சிறையில் நடந்த சம்பவங்களை வைத்து பார்க்கும் போது சிறைகள் கைதிகளுக்கு உல்லாசமான இடமாக மாறிவிட்டதா? என்ற கேள்வியை நம்மிடையே எழுப்பி இருக்கிறது.

இங்கிலாந்து நாட்டில் உள்ள ஸ்டபோர்டுஷையர் என்ற இடத்தில் உள்ள சிறையில் கடந்த 2017 ஆம் ஆண்டில் 31 வயதுடைய ஜோசப் என்ற நபர் ஒருவர் உடல் ரீதியாக கடுமையாக காயப்படுத்தியதன் காரணமாக அவருக்கு 14 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த கைதியுடன், சிறையில் பணிபுரிந்த 28 வயதுடைய ஹீதர் பிஞ்சுபேர்க் என்ற பெண் அதிகாரி சட்டவிரோதமாக தொலைபேசியில் பேசியுள்ளார். இதனை அறிந்த காவல் துறையினர் பெண் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்த நிலையில் மேலும் இதே பெண் அதிகாரி வேறு ஓரு அரசு அலுவலகத்திலும் சட்டவிரோதமாக நடந்துகொண்டது தெரியவந்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த ஆண்டு (ஜனவரி 09) வழங்கப்படயுள்ளது.

இதே சிறையில் 31 வயதுடைய சாரா பெர்னெட் என்ற பெண் அதிகாரி 2023 ஆம் ஆண்டு சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதி ஒருவருடன் தனிமையில் இருந்திருக்கிறார். இதற்காக அவர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது சாரா அவரது சொந்த ஊரிலேயே அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார். மேலும் இந்த சிறையில் காசாளராக பணிபுரிந்த 52 வயதுடைய யோலண்டா பிரிக்ஸ் என்பவர் சிறை கைதி ஒருவருடன் உல்லாசத்தில் இருந்துள்ளார். இதனை அந்த கைதி மற்ற கைதிகளிடம் சொல்லி பெருமை அடைந்ததை சக கைதி ஒருவர் காவலரிடம் சொல்ல அவர் மீது காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com