
சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்த 23 வயதான கலையரசன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் தமிழரசி என்ற பெண்ணை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
கருத்து வேறுபாடு காரணமாக கலையரசனை விட்டு பிரிந்த தமிழரசி, அவரது வீட்டின் அருகிலேயே வீடு எடுத்து தனது தாய் தந்தை மற்றும் தம்பிகளுடன் வசித்து வந்துள்ளார். மனைவியுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் தமிழரசன் அடிக்கடி தனது குழந்தையை சென்று பார்ப்பது, குழந்தைக்கு பொம்மைகள் திண்பண்டங்கள் போன்றவற்றை வாங்கி கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதே போல் கடந்த (ஜூன் 15) தேதி இரவு வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய கலையரசன் ரோட்டில் விளையாடி கொண்டிருந்த தனது குழந்தையை கடைக்கு தூக்கி சென்று தேவையான பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். மீண்டும் குழந்தையை வீட்டில் விட வந்த கலையரசனை பார்த்த தமிழரசியின் தம்பி சக்திவேல் “நீ ஏன்டா குழந்தையை தூக்குற, இதுக்குமேல குழந்தையை பார்க்க வந்த கொன்னுடுவேன்” என மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.