“இன்ஸ்டாகிராமில் காதலித்த சிறுவன்” - சாதியால் காதலை மறுத்த அண்ணன்.. இருதரப்பிலும் நடந்த கத்திக்குத்து மற்றும் கடத்தல் கைதான ஏழு பேர்!

தனது தங்கை கணேஷை காதலிப்பது பற்றி தனது மற்றொரு நண்பரான ராஜ் என்பவரிடம் இதை பற்றி தெரிவித்துள்ளார். நண்பனுக்கு உதவ எண்ணிய ராஜ். கணேஷை, மஞ்சுளாவை விட்டு விலக சொல்லி மிரட்டியுள்ளர்.
thiruppur district murder attack
thiruppur district murder attackthiruppur district murder attack
Published on
Updated on
2 min read

திருநெல்வேலி மாவட்டம், கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுவன் கணேஷ். (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் பொங்கலூர் பகுதியை சேர்ந்த அவரது நண்பர் ஒருவரின் தங்கையான மஞ்சுளா என்பவரை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்துள்ளார். இதனை தெரிந்துகொண்ட மஞ்சுளாவின் அன்னன் கணேஷ் மாற்று சமூகத்தை சேர்ந்த நபர் என்பதால் அவர்களது காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத மஞ்சுளா மற்றும் கணேஷ் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர்.

இதனால் மஞ்சுளாவின் அண்ணன் தனது தங்கை கணேஷை காதலிப்பது பற்றி தனது மற்றொரு நண்பரான ராஜ் என்பவரிடம் இதை பற்றி தெரிவித்துள்ளார். நண்பனுக்கு உதவ எண்ணிய ராஜ். கணேஷை, மஞ்சுளாவை விட்டு விலக சொல்லி மிரட்டியுள்ளர். யார் சொல்வதையும் கேட்க தயாராக இல்லாத கணேஷ் தொடர்ந்து மஞ்சுளாவை காதலித்து வந்துள்ளார். இதன் காரணமாக ராஜ் மற்றும் கணேஷ் இடையே ஆறு மாதங்களாக வாக்குவாதம் நடைபெற்று வந்திருக்கிறது.

thiruppur district murder attack
thiruppur district murder attackthiruppur district murder attack

இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் ராஜ் நண்பரான தினேஷ் என்பவரை தொடர்பு கொண்ட கணேஷ், ராஜை சமரசம் பேச பொங்கலூரில் உள்ள பேக்கரி அருகே வரவழைத்துள்ளனர். ராஜ் அப்பகுதிக்கு சென்றவுடன் அங்கு காத்திருந்த கணேஷ் மற்றும் அவரது நண்பர்கள் ராஜன், கௌதம் ஆகிய மூவரும் சேர்ந்து ராஜை தாக்கி கத்தியால் குத்திவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ராஜை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற ராஜின் சகோதரர்கள் சண்டீஸ்வரன் மற்றும் கருத்தப்பாண்டி நடந்ததை பற்றி ராஜ் இடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.

மேலும் ராஜ், கணேஷ் மீது காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனை அடுத்து தப்பி சென்ற கணேஷ் மற்றும் அவரது நண்பர்களை தேடி சென்ற சண்டீஸ்வரன்,கருத்தப்பாண்டி மற்றும் கண்ணன் ஆகிய மூவரும் பொங்கலூரில் பதுங்கி இருந்த கணேஷை காரில் கடத்திச் சென்று மாதப்பூர் என்ற இடத்தில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்து வந்த சிறுவன் நடந்ததை குறித்து போலீசில் புகாரளித்துள்ளார். இந்நிலையில் இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கணேஷ், ராஜ், கௌதம், ராஜன், சண்டீஸ்வரன், கருத்தப்பாண்டி, கண்ணன் ஆகிய ஏழுபேரை கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com