ம. நீ.ம கட்சியின் தலைவர் கமல்ஹசான்.. டெல்லி நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக பதவி ஏற்பு!

டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் பதவி ஏற்பு நடைபெற இருந்த நிலையில் நேற்று டெல்லி புறப்பட்டு சென்ற கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் “மக்களின் வாழ்த்துக்களுடன் டெல்லியில் பதவியேற்று உறுதிமொழியுடன் எனது பெயரை பதிவு செய்ய உள்ளேன்
Kamal Haasan to take oath as MP in Parliament
Kamal Haasan to take oath as MP in Parliament
Published on
Updated on
1 min read

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் பிரபல நடிகருமான கமல்ஹாசன் தனது கட்சியை திமுகவுடன் இணைத்து கொண்ட நிலையில், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்கள் அவை தேர்தலில் திமுக கூட்டணியுடன் வெற்றி பெற்ற கமல்ஹாசன் மாநிலங்கள் அவையில் எம்.பி. யாக தேர்ந்தெடுக்க பட்டிருந்தார். இதற்கு பல்வேறு திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்க பட்ட கடிதத்தை ரஜினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றிருந்தார். 

Kamal Haasan lok sabha oath
Kamal Haasan lok sabha oathKamal Haasan lok sabha oath

டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் பதவி ஏற்பு நடைபெற இருந்த நிலையில் நேற்று டெல்லி புறப்பட்டு சென்ற கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் “மக்களின் வாழ்த்துக்களுடன் டெல்லியில் பதவியேற்று உறுதிமொழியுடன் எனது பெயரை பதிவு செய்ய உள்ளேன். இது எனக்கு ஒரு இந்திய குடிமகனாக கொடுக்கப்பட்ட கடமை மற்றும் மரியாதை எனது கடமையை  பெருமையோடு செய்ய உள்ளேன்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று (ஜூலை 24) மாநிலங்களவை உறுப்பினராக தமிழில் உறுதிமொழி எடுத்து, கமல்ஹாசன் பதவியேற்றார். இவருடன் திமுகவால் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற ஐந்து உறுப்பினர்களும் எம்.பி.க்களாக  பதவியேற்றனர். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com