ஃபிரோசாபாத்தின் யாதவ் காலனியில் கடந்த சனிக்கிழமையன்று, இரண்டு வயது சிறுவனின் தாய் தனது திருமண விருப்பத்தை நிராகரித்ததை அடுத்து, 24 வயது இளைஞர் ஒருவர் அக்குழந்தையை சாலையில் பலமுறை தூக்கி எறிந்து கொன்றதாகக் கூறப்படும் CCTV காட்சிகள் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
24 வயதான ரதி தேவி என்பவது மகன்தான் ஆரவ் என்ற அந்தக் குழந்தை. ரதி அரோன் பகுதியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். ரதி தேவிக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட திருமண தகராறுகள் காரணமாக கணவரிடமிருந்து பிரிந்து, அவர் தனது பெற்றோர் வீட்டில் தங்கி வந்துள்ளார். கடந்த சனிக்கிழமையன்று, ரதியும் அவருடைய தாயார் பிங்கி தேவியும் விவாகரத்து நடவடிக்கைகள் குறித்து சட்ட ஆலோசனை பெறுவதற்காக ஷிகோஹாபாத் சென்றியிருந்தனர். வழக்கறிஞருடனான அவர்களது சந்திப்பு மாலையில் திட்டமிடப்பட்டிருந்ததால், அவர்கள் பிங்கியின் தோழியின் வீட்டில் தங்கியுள்ளனர்.
புடான் மாவட்டத்தில் மளிகைக் கடை நடத்தி வரும் மற்றும் ரதியின் கணவரின் உறவினரான ஜிதேந்திர பதக் என்ற விராஜ் எனும் நபர், விவாகரத்து நடவடிக்கைகளுக்கு உதவியபோது ரதியின் குடும்பத்தினருடன் நெருங்கிய உறவை வளர்த்துக் கொண்டார் என்று ஃபிரோசாபாத் காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தக் காலகட்டத்தில், அவர் ரதியிடம் அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டி தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஆனால் ரதி அதைத் திரும்பத் திரும்ப நிராகரித்ததாக கூறப்படுகிறது. விராஜ் அவர்களை உத்திரபிரதேச மாவட்டம், ஷிகோஹாபாத் வரை பின்தொடர்ந்து வந்து, விவாகரத்தை இறுதிசெய்து தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு ரதிக்கு மீண்டும் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு ரதியும் அவரது தாயும் தொடர்ந்து மறுத்து வந்துள்ளனர். பின்பு அவரது குழந்தை ஆரவிற்கு டாஃபி வாங்கித் தருவதாகக் கூறி வெளியே அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பிற்பகல் 2.30 மணியளவில், அவர் குழந்தையை வீட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று, தரையில் பலமுறை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. காவல்துறையினரால் ஆய்வு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளில், அவர் குழந்தையை சாலையில் குறைந்தது எட்டு முறையாவது இரக்கமின்றி வீசுவது பதிவாகியிருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் குழந்தையை வீட்டிற்கு வெளியே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றதாகவும், சுமார் 10 நிமிடங்கள் கழித்து குடும்ப உறுப்பினர்கள் ஆரவை வாயிலுக்கு அருகில் கண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூத்த காவல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கினர். குழந்தையின் சடலம் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. ராதியைத் திருமணம் செய்துகொள்ளும் தனது விருப்பத்திற்கு குழந்தையை ஒரு தடையாகக் கருதியதாக குற்றம் சாட்டப்பட்டவர் தெரிவித்துள்ளார். ஷிகோஹாபாத் காவல் நிலையத்தில் BNS பிரிவு 103(1), கொலையின் கீழ் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு தற்போது செய்யப்பட்டுள்ளது.
வழக்கு பதிவு செய்யப்பட்ட உடனேயே குற்றவாளியைக் கைது செய்ய நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டதாக நகர காவல் கண்காணிப்பாளர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். “மெயின்புரி சாலை அருகே குற்றவாளி கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க முயன்றதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், ஒரு காவல் குழு அப்பகுதியைச் சுற்றி வளைத்தது. அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரிக்க முயன்றபோது, அவர் காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். காவல்துறையினர் பதிலுக்குச் சுட்டதில், கைது செய்யப்படுவதற்கு முன்பு குற்றவாளியின் காலில் துப்பாக்கிக் குண்டு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.