“காட்டுக்குள் கருகிக் கிடந்த பெண் சடலம்” - மலைப்பகுதியில் வைத்து காதலன் வெறிச்செயல்.. தாய் மகன் தற்கொலையில் வெளியான பகீர் பின்னணி!

இது குறித்து வழக்குப்பதிவு செய்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம்
Published on
Updated on
2 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள உப்பாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாதப்பன் என்பவர் மகன் 30 வயதுடைய ராஜசேகர். இவருக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் தாயுடன் தங்கி கெலமங்கலம் அருகே உள்ள சின்னட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள ராஜேஷ்குமார் என்வருக்கு சொந்தமான கடையில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வந்தார். அப்போது ராஜசேகருக்கு பெங்களூர் ஆடுகோடி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நளினி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து போன் மற்றும் நேரில் சந்தித்து பேசிவந்த நிலையில் இவர்களது பழக்கமானது காதலாக மாறி இருவரும் தொடர்ந்து வெளியில் ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர்.

இதற்கிடையில் ராஜசேகர் வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ரூத்ரப்பா என்பருக்கும், ராஜசேகருக்கும் பொது வழியில் செல்வது குறித்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் நேற்று முன்தினம்(ஜூன் 28) நள்ளிரவில் ராஜசேகர் மற்றும் அவருடைய அம்மா மஞ்சுளா ஆகிய இருவரும் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு ராஜசேகர் “நானும், எனது தாய் மஞ்சுளா தற்கொலை செய்து கொள்ள போகிறோம், அதற்கு காரணம் பக்கத்து வீட்டை சேர்ந்த ருத்தரப்பா, அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தார் தான், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னையும் என் தாயையும் ஒரே குழியில் புதைக்க வேண்டும்” என கடிதம் எழுதி கன கடை உரிமையாளர் மற்றும் நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி உள்ளார்.

செல்போனில் வந்த கடித்தை பார்த்து அதிர்ந்த அவரது நண்பர்கள் நள்ளிரவில் கொலமங்கலம் காவல் நிலையம் சென்று போலீசாரிடம் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக போலீசார் இருவரையும் செல்போன் டவர் லொகேஷன் வைத்து தேடிய போது தேன்கனிக்கோட்டை தண்டரை ஏரி பகுதியில் இருப்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளர் சாவித்திரி மற்றும் போலீசார் சென்று ஏரியில் தேடிய போது ராஜசேகர், தாய் மஞ்சுளா ஆகிய இருவரின் உடல் துணியால் கட்டப்பட்ட நிலையில் மிதந்து உள்ளது. இருவரின் சடலங்களை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. ராஜசேகரின் காதலி நளினா பெங்களூர் ஆடுகோடி பகுதியில் ஹாஸ்டலில் தங்கி பியூட்டி பார்லர் நடத்தி வந்துள்ளார். அவருக்கு தாய், தந்தை யாரும் இல்லை என கூறப்படுகிறது.ராஜசேகர் நளினியை தவிர்த்து வேறு ஒரு பெண்ணுடன் பேசி வந்ததாக சொல்லப்படுகிறது, இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம்போல கடந்த வாரம் காதலி நளினியுடன் மாதேஸ்வரன் மலைக்கு சென்ற ராஜசேகர் அவரை கொலை செய்து உடலை காட்டு பகுதியில் எரித்துவிட்டு வீட்டிற்கு தப்பி சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் பௌகாவி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 20 முதல் 25 வயது உடைய பெண் கொலை செய்யப்பட்டு உடல் எரிந்த நிலையில் இருப்பதாக மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். எனவே தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலில் கருகிய நிலையில் நகைகள், வாட்சு உள்ளிட்டவற்றை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அதில் ராஜசேகர் கார் அப்பகுதியில் உள்ள டேல்கேட்டிற்கு சென்று வந்துள்ளதை கண்டறிந்துள்ளனர். அதை வைத்து விசாரித்த போது இறந்து பெண் பெங்களூரை ஆடுகோடி பகுதியில் தங்கி உள்ள நளினி என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விடுதியில் உடன் தங்கியுள்ள நளினியின் தோழிகளிடம் விசாரித்ததில் ராஜசேகர் நளினியை காதலித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

எனவே கார் எண்ணை வைத்து முகவரியை கண்டறிந்து கர்நாடக போலீசார் நேற்று முன்தினம் ராஜேசுக்கு போன் செய்து “உங்கள் கார் மண்டியா மாவட்டம் டோல்கேட் பகுதியில் சென்றுள்ளது அங்கு ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது அது குறித்து உங்களுக்கு தெரியுமா?” என விசாரித்துள்ளனர். அதில் பதட்டமடைந்த ராஜசேகர் கொலை வழக்கில் சிக்கிக் கொள்வோம் என பதட்டம் அடைந்து நிலப் பிரச்சனையில் தாயுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொணடது தெரியவந்தது. காதலியை கொலை செய்துவிட்டு கொலையை திசை திருப்ப தாயுடன் சேர்ந்து வாலிபர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ராஜசேகர் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்த கர்நாடக போலீசார் தேன்கனிக்கோட்டைக்கு வந்து எதற்காக காதலியை கொலை செய்தார் என விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com