

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சித்தேரி கிராமத்தில் வசிக்கும் 5 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 1- ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை வழக்கம்போல் பள்ளி முடிந்ததும் தனது வீட்டின் பதிகத்தில் உள்ள கோயிலின் அருகே தனியாக விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, அதே பகுதியில் வசித்து வந்த வெங்கட்ராமன் (35) என்பவர், சிறுமி கோயில் அருகே தனியாக விளையாடிக் கொண்டிருந்ததை நீண்ட நேரமாக கவனித்து வந்துள்ளார், பின்னர் யாரும் அருகில் இல்லாத நேரம் பார்த்து விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தூக்கிச் சென்று உள்ளாடையை கழற்றி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து சிறுமி வீட்டிற்கு சென்றுள்ளார், சிறுமி சோர்வாக இருந்ததை பார்த்து, அவரது தாய் சிறுமியிடம் என்ன ஆச்சி என்று கேட்டுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார், சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கி, போக்சோ சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்னனர். மேலும், போலீசார் வெங்கட்ராமனை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் சித்தேரி கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தில் வசிக்கும் பொதுமக்கள் இந்தச் சம்பவத்தால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.