“11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திமுக பிரமுகர்” - வீடியோ எடுத்தவரை மிரட்டும் கட்சியினர்… அலட்சியம் காட்டுகிறதா காவல்துறை?

புகார் தொடர்பாக இதுவரை முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது...
“11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திமுக பிரமுகர்” - வீடியோ எடுத்தவரை மிரட்டும் கட்சியினர்… அலட்சியம்  காட்டுகிறதா  காவல்துறை?
Published on
Updated on
1 min read

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே மடையம்பாக்கம் கிராமத்தில் உள்ள இருளர் சமூகத்தைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது வழியில் வந்த திமுகவில் கிளை கழக பொறுப்பில் உள்ள சிவா என்பவர் மாணவியிடம் அவரை இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்து செல்வதாக கூறி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். பின்னர் பாதி வழியில் வண்டியை நிறுத்திய சிவா அச்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த சிறுமி தனக்கு நடந்த சம்பவம் குறித்து சக தோழிகள் மற்றும் உயர் வகுப்பு மாணவிகளிடம் தெரிவித்திருக்கிறார். அதற்கு அவர்கள் குழந்தைகள் உதவி எண்ணுக்கு போன் செய்து தகவல் அளிக்க சொன்ன நிலையில் சிறுமி இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளார். தலைமை ஆசிரியர் இதனை உடனே பெற்றோரிடம் தெரிவிக்குமாறு சிறுமியிடம் கூறிய நிலையில் அவர் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

Admin

இந்த தகவல் அந்த அப்பகுதியை சேர்ந்த வேலு என்பவர் நடந்ததை அச்சிறுமியிடம் கேட்டு அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கிடையில் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் புகார் தொடர்பாக இதுவரை முதல் தகவல் அறிக்கை எதுவும் பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும், சிறுமிக்கும் நடந்த வன்கொடுமை பற்றி வீடியோவாக எடுத்து வெளியிட்ட வேலு என்பவரை திமுகவை சேர்ந்தவர்கள் மிரட்டியதாகவும் மேலும் காவல்துறை வைத்து தேடி வரும் நிலையில் இதனால் வேலு தற்போது தலைமறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் காஞ்சிபுரத்தில் உள்ள இருளர் பழங்குடியினர் சங்கத்தை சேர்ந்தவர்கள் சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படுமோ என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் அழைத்து சென்று பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்திருக்கின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com