
செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் 36 வயதுடைய மகாலட்சுமி என்ற திருநங்கை. இவர் நேற்று அவரது வீட்டில் இருந்து OMR சாலை செல்லும் வழியில் உள்ள நாவலூர் பழைய சுங்கச்சாவடி அருகே சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதிக்கு வந்த இரண்டு திருநங்கை உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் திடீரென திருநங்கை மகாலட்சுமியை கத்தியால் சரமாரி வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதில் முகம், கை, கை மணிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறிய நிலையில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திருநங்கையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பாக்கம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அடுக்குமாடி குடியிருப்பில் சேர்ந்த மகாலட்சுமி என்ற திருநங்கைக்கும், கண்ணகி நகரைச் சேர்ந்த 30 வயதுடைய பிரகாஷ் என்பவருக்கும் இடையே கடந்த 8 மாத காலமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. மகாலட்சுமி, பிரகாஷை மரியாதை குறைவாகப் பேசியதே இந்த முன் விரோதத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இதனால் மகாலட்சுமி மீது கடும் ஆத்திரத்தில் இருந்த பிரகாஷ் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி உதவிக்காக கண்ணகி நகரைச் சேர்ந்த திருநங்கைகளான சுஜி(35) அபி (30) என்ற இரண்டு நபர்களையும் மேலும் இரண்டு ஆண்களையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டுள்ளார். இந்து பெரும் ஒரு ஆக்டோவில் பெரும்பாக்கத்தில் இருந்து மகாலட்சுமியைப் பின்தொடர்ந்து வந்து ஓஎம்ஆர் சாலை ஏகாட்டூர் பழைய சுங்கச்சாவடி அருகில் நின்றிருந்த மகாலட்சுமியை வழிமறித்துள்ளனர். பின்னர் பிரகாஷ் கத்தியால் மகாலட்சுமியின் கன்னம் உதடு, கழுத்து மற்றும் வலது கை மணிக்கட்டு ஆகிய இடங்களில் சரமாரி வெட்டியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநங்கையை வெட்டிவிட்டு தப்பி சென்ற திருநங்கைகள் சுஜ, அபி மற்றும் பிரகாஷ் உள்ளிட்ட ஐந்து பேரை இரண்டு நாட்களாக தேடி வருகின்றனர். மேலும் நடுரோட்டில் வைத்து திருநங்கை வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.