“அம்மா செத்த அதே நாளில் நானும் சாகுறேன்” - தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்.. கடிதத்தில் இருந்த உருக்கமான வார்த்தைகள்!

இதனால் அச்சமடைந்த கலைச்செல்வி நேற்று அவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளருக்கு போன் செய்து...
nadhiya
nadhiyaAdmin
Published on
Updated on
2 min read

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதுடைய நதியா. இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக மறைமலைநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காந்தி நகரில் வாடகை வீட்டில் தங்கி ஒரகடத்தில் உள்ள ஃபாக்ஸ்கான் என்கிற தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நதியாவின் தந்தை உயிரிழந்த நிலையில் தாயுடன் வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த வருடம் அவரது தாயும் உயிரிழந்த நிலையில் தனது தோழியுடன் தங்கி வேலை பார்த்து வந்திருக்கிறார்.

தாய் மற்றும் தந்தை இருவரையும் இழந்த நதியா அவ்வப்போது மிகுந்த மனா வருத்தம் அடைந்து பேசி வந்திருக்கிறார். அவ்ருக்கு தோழிகள் ஆதரவாக இருந்து பாதுகாத்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் நதியவுடன் ஒன்றாக வீடு எடுத்து வசித்து வந்த தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண் தனது சொந்த ஊரில் நடக்கும் திருவிழாவிற்காக சென்னையில் இருந்து வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது அறையில் தனிமையில் இருந்த தனிமையில் இருந்து வந்த நதியா மிகுந்த மன உள்ளச்சலுக்கு உள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் தன்னுடன் பணிபுரியும் சக தோழிகளிடம் தான் அனாதை என்றும் தனக்காக யாருமே இல்லை என்றும் புலம்பியதாக தெரிகிறது. இந்த நிலையில் கலைச்செல்வி கடந்த மூன்று தினங்களாக நதியாவை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்த நிலையில் நதியா பதிலளிக்காமல் இருந்துள்ளார். இதனால் அச்சமடைந்த கலைச்செல்வி நேற்று அவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளருக்கு போன் செய்து நதியாவை வீட்டிற்கு சென்று பார்க்க கூறியுள்ளார். எனவே அவர் வீட்டிற்கு சென்று பார்த்த போது நதியாவின் அறை உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்துள்ளது.

Admin

தொடர்ந்து நீண்ட நேரமாக கதவை தட்டியும் நதியா கதவை திறக்காத நிலையில் வீட்டின் உரிமையாளர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்த போது நதியா தனது துப்பட்டாவை கொண்டு மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் போலீசார் நதியாவின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த (15.04.2018) ஆம் தேதி அவரது தாய் உயிரிழந்த நிலையில் “அம்மா செத்த அதே நாளில் நானும் சாகுறேன்” என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தனியாக இருந்த பெண் தாய் இறந்த அதே நாளில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பு: மன அழுத்தம் அல்லது தற்கொ*லை எண்ணம் ஏற்பட்டால், அரசு உதவி மையமான 104 அல்லது சினேகா உதவி மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com