“கள்ளக்காதலனோடு உல்லாசத்தில் இருந்த தாய்” - பார்க்க கூடாததை பார்த்த குழந்தைகள்.. அடுத்த நொடியே நடந்த கொடூர சம்பவம்!

இருவரும் வீட்டில் தனிமையில் இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக வெளியில் விளையாடி கொண்டிருந்த அம்முவின் குழந்தைகள்...
ammu.
ammu.
Published on
Updated on
2 min read

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் தனியார் பேருந்து ஒன்றில் நடத்துநராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அம்மு குட்டி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு திருமணமாகி, 7 வயதில் மகிலேஷ் என்ற மகனும், நான்கு வயதில் ஸ்ரீநிதி என்ற மகளும் உள்ளனர். சந்தோஷ் பேருந்து நடத்துனராக பணியாற்றி வந்த நிலையில் பகல் முழுவதும் வீட்டிற்கு வர மாட்டார் என சொல்லப்படுகிறது. எனவே அம்மு குட்டி பகலில் குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் அம்மு குட்டிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்திருக்கின்றனர். மேலும் அம்மு தனது கணவர் வேலைக்கு சென்ற பிறகு காதலனை வீட்டிற்கு அழைத்து உல்லாசத்தில் இருந்து வருவதை வழக்கமாக வைத்திருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

அதே போல கடந்த (ஏப் 11) ஆம் தேதி, சந்தோஷ் வழக்கம் போல வேலைக்கு சென்றிருந்த நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அம்மு குட்டி, தனது கள்ளக் காதலனை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். பின்னர் இருவரும் வீட்டில் தனிமையில் இருந்த நிலையில் எதிர்பாராத விதமாக வெளியில் விளையாடி கொண்டிருந்த அம்முவின் குழந்தைகள் வீட்டிற்கு சென்று பார்க்க கூடாததை பார்த்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அம்மு தனது ரகசியம் வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சத்திலும், ஆத்திரத்திலும் ஈவு இரக்கமின்றி தனது இரண்டு குழந்தைகளையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

Admin

தொடர்ந்து அன்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய தந்தை சந்தோஷ், குழந்தைகளின் உடலில் இருந்த ரத்தக் காயங்களையும் தழும்புகளையும் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். பின்னர் குழந்தைகளிடம் மென்மையாக காயங்கள் குறித்து விசாரித்தபோது, அவர்கள் வீட்டில் நடந்த களேபரங்களையும், தாய் தங்களை அடித்துத் துன்புறுத்திய காரணத்தையும் கண்ணீருடன் கூறியுள்ளனர். குழந்தைகள் சித்திரவதை செய்யப்பட்டதை அறிந்த சந்தோஷ், உடனடியாக கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காயமடைந்த குழந்தைகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.மேலும் அம்முகுட்டி மற்றும் அவரது கள்ளக்காதலன் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தாயே கள்ளகாதலுக்காக இரண்டு பிஞ்சு குழந்தைகளை அடித்து துன்புறுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com