
சென்னை ஐநாவரத்தை சேர்ந்தவர் 38 வயதான சதிஷ். இவர் அதே பகுதியில் ஸ்பீக்கர் சர்வீஸ் செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரும் ரெபேக்கா என்பவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு தற்போது ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். கருத்து வேறுபாட்டின் காரணமாக சதீஷை விட்டு பிரிந்த ரெபேக்கா நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் குழந்தை ஸ்டெபி ரோஸ் தனது தந்தையான சதீஷுடன் வாழ்ந்து வந்துள்ளார். ரோஸ் பெண் குழந்தை என்பதாலும் 6 வயதே ஆகும் நிலையில் குழந்தையை தாய் தான் வளர்க்க வேண்டும் என்று போலீசார் சதீஷிடம் தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சதீஷ் குழந்தையை விட்டு பிரிய மனம் இல்லாததால் குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி ஸ்டெபி ரோசை தன்னுடன் ஆலந்தூர் எம்.கே.என் சாலையில் உள்ள ஓட்டலுக்கு அழைத்து சென்றுள்ளார் சதிஷ் இரவு அறை எடுத்து குழந்தையுடன் அங்கேயே தங்கியுள்ளார்.
இரவு நேரத்தில் தனது குழந்தையை கழுத்தறுத்து கொலை செய்த சதிஷ் தானும் கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார். இதனை சதீஷ் தனது அக்காவான கேசியாவிற்கு போன் செய்து கூறியுள்ளார். உடனடியாக ஓட்டலுக்கு விரைந்த கேசியா அங்கு உயிருக்கு போராடி கொண்டிருந்த சதீஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். குழந்தை ஸ்டெபி ரோஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
குழந்தை கொலை செய்யப்பட்டதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் ரெபேக்கா தான் ஏற்கனவே தனது கணவன் தன்னை மிரட்டியது குறித்து ககாவல் துறையில் கடந்த (ஜூலை 21) அன்று புகாரளித்தும் காவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எப்போது காவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று எனது குழந்தையின் உயிர் இப்படி போய் இருக்காது என கதறி வருகிறார். ஏற்கனவே சதிஷ் ரெபேக்காவை குழந்தையை என்னிடம் இருந்து கேட்டல் குழந்தையை கொலை செய்து விட்டு உன்னையும் கொலை செய்து விடுவேன் என கூறியதாக சொல்லப்படுகிறது. 6 வயது சிறுமி தனது தந்தையால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பாக்குது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.