“14 வயது சிறுமியை சீரழித்த அக்காவின் காதலன்” - மாணவியின் உடல் முழுவதும் இருந்த நகக்கீறல்கள்… 21 வயது வாலிபர் செய்த அசிங்கம்!

ஓட்டேரி தேவராஜ் தெருவில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சிறுமியை அழைத்து சென்று...
“14 வயது சிறுமியை சீரழித்த அக்காவின் காதலன்” - மாணவியின் உடல் முழுவதும் இருந்த நகக்கீறல்கள்… 21 வயது வாலிபர் செய்த அசிங்கம்!
Published on
Updated on
1 min read

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி. இவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் மூத்த சகோதரியான வைஷ்ணவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வியாசர்பாடியைச் சேர்ந்த 21 வயதுடைய சிலம்பரசன் என்ற வாலிபரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு வைஷ்ணவி சிலம்பரசனை காதலிப்பதை அறிந்த அவரது பெற்றோர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.எனவே சிலம்பரசன் அடிக்கடி வைஷ்ணவியை சந்திக்க அவரது வீட்டிற்கு செல்வது மற்றும் வீட்டில் உள்ள மற்றவர்களிடம் பேசி பழகுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில் கடந்த (மார்ச் 9) ஆம் தேதி வழக்கம் போல காதலி வைஷ்ணவி வீட்டிற்கு சென்ற சிலம்பரசன் வீட்டில் பள்ளிக்கு தயாராகி கொண்டிருந்த 14 வயது சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் செல்வதாக கூறி சிலம்பரசன் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் பெரம்பூரில் உள்ள ஒரு கடையில் சிறுமிக்கு டி-ஷர்ட் மற்றும் ஸ்கர்ட் வாங்கி கொடுத்ததுடன், பட்டாளம் பகுதியில் உள்ள ஜூஸ் கடையில் சோடா வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பின் ஓட்டேரி தேவராஜ் தெருவில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்றிருக்கிறார்.

பின்னர் அங்கு வைத்து சிறுமிக்கு ஆசை வார்த்தைகளை கூறிய சிலம்பரசன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து சிறுமி அவரது வீடு திரும்பிய நிலையில் சிறுமிக்கு திடீரென உடல் நல குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த சிறுமியின் தாய் சிறுமியின் ஆடைகளை கலைந்து பார்த்த போது உடல் முழுவதும் நகக்கீறல்களும், கடித்த வடுக்களும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து சிறுமியிடம் கேட்ட போது சிலம்பரசன் செய்த செயலை கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் உடனடியாக சிறுமியுடன் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றை போலீசாரிடம் தெரிவித்து சிலம்பரசன் மீது புகார் அளித்தார். எனவே சிலம்பரசன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார் சிலம்பரசனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொந்த அக்காவின் காதலனே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com