“இந்த முகத்தை வச்சிட்டு தானே ஆடுற” - மனைவியின் முகத்தில் ஆசிட் ஊற்றிய கணவர்… மதமாற்றி திருமணம் செய்து கொண்டு சித்ரவதை!

நுங்கம்பாக்கத்தில் சுவாதி கழுத்தறுத்து கொல்லப்பட்டதை போல உன்னை கொன்று விடுவேன்...
“இந்த முகத்தை வச்சிட்டு தானே ஆடுற” - மனைவியின் முகத்தில் ஆசிட் ஊற்றிய கணவர்… மதமாற்றி திருமணம் செய்து கொண்டு சித்ரவதை!
Published on
Updated on
2 min read

சென்னை ஜமீன் பல்லாவரம் பாரதி நகர் துலுக்கானத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முகமது அலி. இவர் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு சல்மா என்ற பெண்ணை காதலித்து அவரை மதம் மாற்றி பாத்திமா என்ற பெயரில் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இந்த தம்பதிக்கு தற்போது நான்கு வயது ஆண் குழந்தை உள்ள நிலையில் அலி தினந்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்திருக்கிறார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

மேலும் பாத்திமாவை சுதந்திரமாக செயல்பட விடாமல் அலி அடித்து துன்புறுத்தி வந்த நிலையில் கணவனின் சித்திரவதை தாங்க முடியாமல் பாத்திமா கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குழந்தையுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து அலி பாத்திமாவை தொடர்பு கொண்டு அலி தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் "2016 ஆம் ஆண்டு நுங்கம்பாக்கத்தில் சுவாதி கழுத்தறுத்து கொல்லப்பட்டதை போல உன்னை கொன்று விடுவேன்” எனவும் மிரட்டி வந்திருக்கிறார். இதனால் மனமுடைந்த பாத்திமா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு பதிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த (மார்ச் 15) ஆம் தேதி பாத்திமாவின் பெற்றோர் அவரது குழந்தையை அழைத்து கொண்டு உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். இதனை அறிந்து அலி,பாத்திமா வீட்டிற்கு வெளியில் காத்திருந்த நிலையில் பாத்திமா தனது தேவைக்காக வீட்டிற்கு வெளியில் வந்திருக்கிறார் அப்போது அவர் மீது கழிப்பறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை ஊற்றியுள்ளார். மேலும் “இந்த முகத்தை வச்சிட்டு தானே ஆடுற” என கூறி தொடர்ந்து ஆசிட்டை உடல் முழுவதும் ஊற்றியுள்ளார்.

இதனை பார்த்த அருகில் இருந்த பாத்திமாவின் சித்தப்பா அலியின் கையில் இருந்த ஆசிட்டை வாங்கிய போது அலி அவரை தள்ளி விட்டு தப்பி சென்றிருக்கிறார். தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் பாத்திமாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதில் பாத்திமா தனது ஒரு கண் பார்வையை இழந்துள்ள நிலையில் இதற்கு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் மீது புகாரளித்துள்ளர். சேர்ந்து வாழ மறுத்த மனைவி மீது கணவன் ஆசிட் ஊற்றிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com