“மைதானத்தில் உயிருடன் எரிந்த பெண்” - கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறு… திருமணமான ஒரு வருடத்தில் நடந்த சோகம்!

8 மாதங்களாக கணவனை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்த நிவேதிதா கடந்த சில தினங்களாக...
“மைதானத்தில் உயிருடன் எரிந்த பெண்”  - கணவன் மனைவி இருவருக்கும் ஏற்பட்ட தகராறு… திருமணமான ஒரு வருடத்தில் நடந்த சோகம்!
Published on
Updated on
2 min read

சென்னை பள்ளிக்கரணை, ராஜேஷ் நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் 30 வயதுடைய நிவேதிதா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சதிஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் இருவரும் பள்ளிக்கரணை பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறை ஏற்பட்டு வந்த நிலையில் திருமணமான இரண்டு மாதங்களில் நிவேதிதா தனது கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

ஏற்கனவே கடந்த 8 ஆண்டுகளாக நிவேதிதா மன அழுத்தத்திற்காக மருத்துவ சிகிச்சை பெற்று தொடர்ந்து மருந்துகள் உட்கொண்டு வந்திருக்கிறார். இந்நிலையில் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையில் மேலும் மனா அழுத்தம் ஏற்பட்டுள்ளது. 8 மாதங்களாக கணவனை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்த நிவேதிதா கடந்த சில தினங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்திருக்கிறார். எனவே முறையாக மன அழுத்தத்திற்கு உட்கொள்ளும் மருந்துகளையும் உட்கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறிய நிவேதிதா பள்ளிக்கரணை பாலாஜி நகரில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று “வண்டி பத்தி வழியில் நின்று விட்டது பெட்ரோல் வேண்டும்” என் கூறி  பாட்டிலில் பெட்ரோல் வாங்கி இருக்கிறார். அதனை தொடர்ந்து அருகில் உள்ள மயிலை பாலாஜி நகர் மின்வாரிய அலுவலகம் பக்கத்தில் உள்ள காலி மைதானத்திற்கு சென்ற நிவேதிதா திடீரென தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீ வைத்து தற்கொலை செய்துகொண்டார்.

Admin

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை போலீசார் நிவேதிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலி மைதானத்தில் பெண் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(குறிப்பு: மன அழுத்தம் அல்லது தற்கொ*லை எண்ணம் ஏற்பட்டால், அரசு உதவி மையமான 104 அல்லது சினேகா உதவி மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.)

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com