

மரணம் என்பது எப்போது யாருக்கு நிகழும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஆனால் சில நேரங்களில் மரணம் தவிர்க்க முடியாத ஒன்றாக கூயோட அகைவிடுகிறது. அதிலும் குழந்தைகளை விபத்தில் இழப்பது என்பது பெற்றோர்களின் வாழ்க்கையையே சூனியமாக்கிவிடும் ஒன்று. அப்படி ஒரு சம்பவம் தான் சென்னை தண்டையார் பேட்டையில் நடந்துள்ளது.
சாலையில், குப்பை வண்டி, தண்ணீர் லாரி போன்றவற்றை இயக்கும் நபர்கள் அதீத கவனத்துடன் செயல்பட வேண்டும். ஒரு சிறு உயிர் கூட இங்கு விலை மதிக்க முடியாத ஒன்றுதான்.
கைலாசபுரத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிப்பவர், வெங்கடேசன். இவர் சைக்கிள் ரிக்ஷா ஓட்டி வருகிறார். இவருக்கு காவியா என்ற 8 வயது மகள் இருந்தார். இவர் பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 2 -ஆம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்றைய தினம் வழக்கம் போல பள்ளிக்கு செல்ல கிளம்பியுள்ளார் காவியா. தாமதமாக கிளம்பியதால், உறவுக்கார பெண்ணான ஜனனி இடம் குழந்தையை பள்ளியில் கொண்டுபோய்விடுமாறு கேட்டுள்ளனர் பெற்றோர். ஆனால் ஜனனியும் சிலிண்டர் கேஸை வண்டியில் ஏற்றியதால் தங்கியுள்ளார், ஆனாலும், காவியாவை பின்னல் அமரச்செய்து, வண்டியை ஓட்டிச்சென்றுள்ளார். ஆனால் எதிர்பாரா விதமாக கியாஸ் சிலிண்டர் சாயத்துவங்கியுள்ளது. கேஸ் சிலிண்டர் சாய்ந்தபோது, ஜனனியின் வண்டி ஆட்டம் காணவே, பேலன்ஸ் செய்ய முடியாமல் தவித்திருக்கிறார். அப்போது பின்னால் அமர்ந்திருந்த குழந்தை காவியா வலது பக்கமாக சரிந்து விழுந்துஉள்ளார், அநேரத்தில் பின்னல் வந்துகொண்டிருந்த, கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (ஜி.சி.சி) குப்பை லாரியின் சக்கரங்களில் சிக்கி குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது.
குப்பை வண்டியில் சிக்கி 8 -வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.