“கோவையை உலுக்கிய சூலூர் சிறுமி கொலை” - கைது செய்யப்பட்ட இருவரும் குற்றவாளிகள்.. தண்டனை விவரம் எப்போது?

உடலில் காயங்கள் இருந்ததால், கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம்...
Coimbatore Crime News
Coimbatore Crime News
Published on: 
Updated on: 
2 min read

கோவை மாவட்டம், சூலூர் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இருவருக்குமான தண்டனை விவரங்கள் வரும் டிசம்பர் 5-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோவை சூலூரை அடுத்த கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த (மே 21 ஆம் தேதி மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். இரவு வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல்வேறு இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவே உடனடியாக இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், கண்ணம்பாளையம் குளக்கரை பகுதியில் சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது உடலில் காயங்கள் இருந்ததால், கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி நேரில் வந்து விசாரணையைத் தீவிரப்படுத்தியதுடன், தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.

Coimbatore Crime News
“ரத்த காயங்களுடன் புதரில் கிடந்த 10 சிறுமியின் சடலம்” - விடிய விடிய நடந்த போராட்டம்.. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளால் பரபரப்பு!

போலீசாரின் அதிரடி விசாரணையில், வழக்குப்பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் பிடிபட்டனர். நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவரும், தற்போது சூலூர் பள்ளபாளையம் பகுதியில் வசித்து வந்தவருமான 33 வயது கார்த்திக், சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அவருக்கு உதவியதாக மோகன்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். முதற்கட்ட விசாரணையில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு ஏற்கெனவே அறிமுகமான கார்த்திக், அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதும், அப்போது மோகன்ராஜும் உடனிருந்ததும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே, சிறுமியின் படுகொலையைக் கண்டித்து பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சூலூர் காவல் நிலையம் முன்பு இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்; என்கவுண்டர் செய்ய வேண்டும் என்றும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில், சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Coimbatore Crime News
கடைக்குச் சென்ற 10 வயது பள்ளி சிறுமி சடலமாக கண்டெடுப்பு! "மர்ம நபரால் பைக்கில் ஏற்றி செல்லப்பட்ட சிறுமிக்கு நடந்த கொடூரம்"

இந்தச் சூழலில், வழக்கின் விசாரணை நடைபெற்ற வந்த நிலையில் மோகன் ராஜ் தான் குற்றவாளி இல்லை என தெரிவித்து வந்த நிலையில் இன்று (நவ 27) வழக்கை விசாரித்த நீதிமன்றம் கைது செய்யப்ம் மோகன்ராஜ் ஆகிய இருவருமே குற்றவாளிகள் என நீதிமன்றம் உறுதிப்படுத்தி உத்தரவிட்டுள்ளது. மேலும், இருவருக்கும் வழங்கப்பட உள்ள தண்டனை குறித்த அறிவிப்பு வரும் டிசம்பர் 5-ம் தேதி வெளியாகும் எனக் கூறப்படுகிறது. 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவை மாவட்டத்தையே உலுக்கிய நிலையில், தற்போது நீதிமன்றத்தின் இந்த உத்தரவும், டிசம்பர் 5-ம் தேதி அறிவிக்கப்பட உள்ள தண்டனை விவரங்களும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.