
பழனியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி திண்டுக்கல் பகுதியில் தனது அத்தை ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். முதல் நாள் கோவிலுக்கு சென்றுவிட்டு சிறுமி மட்டும் தனியாக வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ராஜபாண்டி என்பவர் சிறுமியை வழிமறித்து “நானும் உனக்கு மாமா முறை தான் ஏன் பயந்து ஓடுற” என கேட்டுள்ளார். பின்னர் சிறுமியை வலுக்கட்டாயமாக பிடித்து தனது வீட்டின் அறைக்கு இழுத்து சென்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சிறுமி சத்தம் போடவே அதை கேட்டு வந்த ராஜபாண்டியின் உறவினர்கள் ராஜபாண்டியை கண்டிக்காமல், சிறுமியிடம் “இங்கு நடந்ததை வேறு யாரிடமாவது சொன்னால் உன்னை கொன்றுவிடும்” என மிரட்டியுள்ளனர். இவர்களிடம் இருந்து தப்பித்த சிறுமி தனது அத்தை வீட்டிற்கு சென்றுள்ளார்.
கோவில் சென்று வந்ததிலிருந்து அழுது கொண்டிருந்த சிறுமியிடம் பெற்றோர்களும் உறவினர்களும் என்ன நடந்தது என கேட்க. சிறுமி ராஜபாண்டி தனக்கு செய்த கொடூரத்தை அழுது கொண்டே கூறியுள்ளார். இதை கேட்டு கோபமடைந்த பெற்றோர்கள் ராஜபாண்டியின் வீட்டிற்கு சென்று இது குறித்து கேட்டுள்ளனர்.
சிறுமி சொல்வது போல எதுவும் நடக்கவில்லை “உங்க பொண்ணு என்ன இப்படி பொய் சொல்ற இது தான் நீங்க வளர்த்த லட்சணமா” என கேட்டு ராஜபாண்டியும் அவரது உறவினர்களும் நடந்தது எதுவும் தெரியாதது போல பதிலளித்துள்ளனர்.
பின்னர் இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் போலீசில் புகாரளித்த நிலையில் ராஜபாண்டி மற்றும் அவரது உறவினர்கள் போரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ராஜபாண்டி உட்பட ஐந்து பேரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்