மூன்று குழந்தைகளுக்கு தாயான ஆஷ்லி கெட்சர்சைட், ஒரு பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தனது வீட்டில் பெண்களுக்குப் 'பாலியல் தொழிலாளர்களாக மாறுவது எப்படி?' என்று பயிற்சி அளித்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறார். ஆஷ்லியின் கணவரான மைக்கேல், அதே சந்தேகிக்கப்படும் விபச்சாரக் கும்பல் தொடர்பாக விஷயத்தில் ஏப்ரல் 8 அன்று கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில் அவர் மீது, தொடர்ச்சியாக விபச்சாரத்தை ஊக்குவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், இந்த வாரம் அவரது மனைவி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மீது கூடுதலாக மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது. ஆஷ்லியின் கணவர் கைது செய்யப்பட்டபோது, விபச்சாரக் கும்பலில் ஆஷ்லிக்கு இருந்த தொடர்பு ஆரம்பத்தில் புலனாய்வாளர்களால் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும், அதிகாரிகள் இந்த வழக்கு குறித்து தொடர்ந்து விசாரித்தபோது, ஆஷ்லிக்குச் சொந்தமான பர்னர் ஃபோனைக் கண்டுபிடித்தனர். அதில், விபச்சாரம் தொடர்பான விஷயங்களில் இவருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் வலுவான ஆதாரங்கள் இருந்தன. அவரது கணவர் கைது செய்யப்பட்டபோது, ஆஷ்லி விபச்சார நடவடிக்கையில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்ததோடு, தன்னுடைய பெயரும், தன்னுடைய கணவரின் பெயரும் “கறையிலிருந்து விடுவிக்கப்படும்” என்று நம்புவதாக அப்போது கூறினார்.
விபச்சார நடவடிக்கை தொடர்பாக மைக்கேலுடன் மேலும் இருவரான முன்னாள் காவல் துறைத் தலைவரான மேத்யூ கான்ட்ரெல் மற்றும் காவல் அதிகாரி சாலமன் ஓமோடோயா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கான்ட்ரெல் விபச்சாரத்தை ஊக்குவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், ஓமோடோயா விபச்சாரத்தைத் தூண்டியதாகக் குற்றம் சட்டப்பட்டார். ஓமோடோயா தனக்கு பாலியல் உறவுக்காக ஒருபோதும் பணம் கொடுத்ததில்லை என்றும், தான் ஒரு பாலியல் தொழிலாளி அல்ல என்றும் ஆஷ்லி இதுகுறித்து கூறினார். மேலும், இது பரஸ்பர ஒத்துழைப்போடு நடந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆஷ்லிக்கு விபச்சாரத் தொழிலில் இரண்டு முறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தனது சேவைகளுக்காக வாடிக்கையாளர்களிடம் ஒரு மணி நேரத்திற்கு 1,000 டாலர் கட்டணம் வசூலித்ததாகவும் காவல்துறை தரப்பு கூறுகின்றனர். அதே கட்டண விகிதங்கள் ஆஷ்லியின் போலி தொலைபேசியிலும் காணப்படுகின்றன. மைக்கேலையும், ஓமோடோயாவையும் ஒரே நேரத்தில் கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆஷ்லியின் மின்னஞ்சல் முகவரியைச் சோதித்து, அவரது முந்தைய குற்றப்பதிவுகளைப் பற்றித் தெரிந்துகொண்டனர். தற்போது ஆஷ்லி 200,000 டாலர் பிணைத்தொகையிலும், மைக்கேல் 450,000 டாலர் பிணைத்தொகையிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்