'ஐஆர்எஸ்' அதிகாரி மகள் பலாத்காரம் செய்து கொலை! 8 மாசம் வேலை பார்த்த வேலையாள் வெறிச்செயல்.. பதற வைக்கும் காரணம்!

வேலையை விட்டு நீக்கிய ஆத்திரமும், பணத் தேவை ஆகியவற்றின் காரணமாக வேலைசெய்த வீட்டின் பெண்ணை பலாத்காரம் செய்த வேலையாள்.
பாலியல் வன்கொடுமை செய்து கொலை, கொள்ளை செய்த வேலையாள்
பாலியல் வன்கொடுமை செய்து கொலை, கொள்ளை செய்த வேலையாள்பாலியல் வன்கொடுமை செய்து கொலை, கொள்ளை செய்த வேலையாள்
Published on
Updated on
2 min read

தெற்கு டெல்லியின் உயர்தர குடியிருப்பு பகுதியான கைலாஷ் ஹில்ஸ் பகுதியில், இந்திய வருவாய்த்துறை (IRS) மூத்த அதிகாரி ஒருவரின் வீட்டில் அரங்கேறியுள்ள கொடூர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியுள்ளது. அந்த அதிகாரியின் வீட்டில் வேலைக்காரராக இருந்த 19 வயது ராகுல் மீனா, அதிகாரியின் 22 வயது மகளைப் பலாத்காரம் செய்துவிட்டு, போன் சார்ஜர் வயரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். யுபிஎஸ்சி (UPSC) தேர்வுக்குத் தயாராகி வந்த அந்த இளம்பெண், தனது பெற்றோர் காலை நடைப்பயிற்சி மற்றும் ஜிம்மிற்குச் சென்றிருந்த நேரத்தில் தனியாக இருந்ததைப் பயன்படுத்திக் கொண்டு ராகுல் மீனா இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

இந்தக் கொடூர சம்பவத்திற்குப் பின்னால் இருக்கும் பின்னணி தகவல்கள் மிகவும் அதிர்ச்சிகரமானவை. ராகுல் மீனா கடந்த எட்டு மாதங்களாக அந்த அதிகாரியின் வீட்டில் உதவியாளராகப் பணியாற்றி வந்துள்ளார். ஆனால், அவர் அக்கம்பக்கத்தில் உள்ள மற்ற வீட்டு வேலைக்காரர்களிடம் அடிக்கடி கடன் வாங்குவதையும், வாங்கிய பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றுவதையும் வழக்கமாக வைத்திருந்துள்ளார். இது குறித்துப் பல புகார்கள் வந்ததையடுத்து, ஒரு மாதத்திற்கு முன்பு அந்த அதிகாரி ராகுல் மீனாவை வேலையை விட்டு நீக்கியுள்ளார். தனது வேலை போனதற்குப் பழிவாங்கவும், பணத் தேவைக்காகவும் அவர் மீண்டும் அந்த வீட்டிற்குத் திட்டமிட்டு வந்துள்ளார்.

புதன்கிழமை அதிகாலை சுமார் 6:30 மணியளவில் அந்தப் பகுதிக்குள் நுழைந்த ராகுல் மீனா, அதிகாரியின் குடும்பத்தினர் வழக்கமாக வீட்டின் சாவியை எங்கே வைத்திருப்பார்கள் என்பதை ஏற்கனவே தெரிந்து வைத்துள்ளார். செருப்பு வைக்கும் ஸ்டாண்டிற்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து வீட்டிற்குள் நுழைந்தவர், இளம்பெண்ணைக் கொடூரமாகத் தாக்கிப் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் கொலையை மறைக்க போன் சார்ஜர் வயரால் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். அதன் பிறகு, ரத்தம் படிந்த தனது ஆடைகளை மாற்றிவிட்டு, அங்கிருந்த பீரோவில் இருந்த சுமார் 2.5 லட்சம் ரூபாய் பணத்தைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், ராகுல் மீனா ஆன்லைன் கேம்களுக்கு அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆன்லைன் விளையாட்டு மோகத்தினால் ஏற்பட்ட பணத்தேவைக்காகவே அவர் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். மேலும், டெல்லிக்கு வருவதற்கு முன்பாகவே, ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியில் தனது நண்பரின் மனைவியைப் பலாத்காரம் செய்த புகாரும் இவர் மீது உள்ளது. அங்கு ஒரு செல்போனை விற்றுப் பணம் திரட்டிய அவர், கார் பிடித்து டெல்லிக்கு வந்து இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார்.

இந்தக் கொலை குறித்துத் தகவல் அறிந்த போலீசார், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி டெல்லியின் துவாரகா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பதுங்கியிருந்த ராகுல் மீனாவைக் கைது செய்தனர். அவர் மீது பலாத்காரம், கொலை மற்றும் கொள்ளை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. "தன்னை வேலையை விட்டு நீக்கிய ஆத்திரமும், பணத் தேவையும் தான் இந்தச் செயலுக்குக் காரணமாகத் தெரிகிறது" என்று இணை போலீஸ் கமிஷனர் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com