"ச்சீ..தூக்கத்தில் இதையெல்லாமா பண்ணுவீங்க?" - 10 வருடங்களாக மனைவியை 'பாலியல் வன்கொடுமை' செய்த கணவன்.. தூக்கத்தில் செய்ததாக பகீர் வாக்குமூலம்!

மனைவி சுயநினைவின்றி இருக்கும்போது பாலியல் செயல்களில் ஈடுபடும் ஒரு கோளாறான செக்ஸோம்னியாவால் தனக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.
marital rape case
marital rape casemarital rape case
Published on
Updated on
2 min read

கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக, 18 ஆண்டுகளாகத் தன்னுடன் வாழ்ந்த கணவரால் மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளான பிறகு, தனது பாதுகாப்பு குறித்து அச்சத்தில் பீதியுடன் வாழ்ந்ததாக இரண்டு பிள்ளைகளின் தாய் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த விஷயம் குறித்து அவரது கணவரிடம் கேட்டபோது,தான் தூக்கத்தில் நடக்கும்போது நடந்ததாக அவர் கூறிவந்துள்ளார். தனது மனைவியின் அடையாளத்தை வெளிப்படுத்திவிடும் என்பதால் அடையாளம் காட்ட முடியாத 62 வயதான அந்தப் பிரதிவாதி, மனைவி சுயநினைவின்றி இருக்கும்போது பாலியல் செயல்களில் ஈடுபடும் ஒரு கோளாறான செக்ஸோம்னியாவால் தனக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இருப்பினும், நடுவர் குழுவினர் இந்த வாதத்தை நிராகரித்து, அதற்குப் பதிலாக அவர் தனது மனைவி மீது வேண்டுமென்றே கொடூரமான பாலியல் வன்முறையை நிகழ்த்தினார் என்று தீர்மானித்தனர். சுமார் பத்து ஆண்டுகளாக, அவர் மாதத்திற்கு ஒருமுறை தன்னை பாலியல் ரீதியாகத் தாக்கித் துன்புறுத்தியதாக அப்பெண் ட்ரூரோ (மனைவி) நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

தன் கணவரின் நடத்தையால் தனக்குப் பயமும் அருவருப்பும் ஏற்பட்டதாகவும், அது தனது பாதுகாப்பு குறித்துத் தொடர்ச்சியான அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். இரண்டு குழந்தைகளின் தாயான பாதிக்கப்பட்ட பெண், தாக்குதல்களின் போது அவரது கணவர் தனது வாயையும் மூக்கையும் எப்படி மூடுவார் என்றும், அதனால் தான் மூச்சுத் திணறலுக்கு ஆளாவேன் என்றும் அந்த கொடூரத்தை விவரித்துள்ளார். மேலும், அது "அவருக்கு ஒருவித கிளர்ச்சியை ஏற்படுத்தியது" என்றும் நீதிமன்றமும் அறிந்துகொண்டது. "தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாமலேயே இது நடந்ததாக கணவர் கூறியுள்ளார்," என ட்ரூரோ தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் பாலியல் செயல்களுக்கு ஒருபோதும் சம்மதிக்கவில்லை என்றும், தனது கணவரின் நடத்தை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தனது கணவரை மருத்துவ உதவியை நாடும்படி மன்றாடி வந்ததாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விளக்கினார். ஒவ்வொரு சம்பவத்திற்குப் பிறகும் தனது கணவர் வருத்தம் தெரிவித்து, இது போன்று மீண்டும் ஒருபோதும் நிகழாது என்று உறுதியளிப்பார் என்றும், ஆனாலும் 2006 முதல் 2017 வரை பாலியல் துன்புறுத்தல் மீண்டும் மீண்டும் தொடர்ந்தது என்றும் ட்ரூரோ வெளிப்படுத்தினார். இதனையடுத்து, "அவர் பொய் சொன்னதாகத் தான் குற்றம் சாட்டப் போவதில்லை" என்று நீதிமன்றத்தில் தெரிவித்த பிரதிவாதி, அத்தகைய நிகழ்வுகள் எதுவும் நடந்ததாகத் தனக்கு நினைவில் இல்லை என்றும் அவரின் கணவர் கூறினார்.

மேலும், ட்ரூரோ பத்தாண்டு காலமாக அச்சத்தில் வாடியதை விவரித்ததோடு, தான் பிரிந்து சென்றால் "குழந்தைகளை மீண்டும் பார்க்கவே முடியாது" என்று தன் கணவர் மிரட்டியதால், தான் அச்சுறுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்த, அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, ஆயுள் முழுவதும் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் சேர்க்கப்பட்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com