
கோயம்புத்தூர் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு திருமணமாகி வனிதா என்ற மனைவியும். இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் கண்ணனின் மூத்த மகளான அஸ்விதா அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார்.
கண்ணனின் வீட்டுக்கு மேல் மாடியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ராஜன் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். பின்னர் கடன் பிரச்சனையால் வீட்டை காலி செய்து உடுமலை பேட்டையில் வசித்து வந்த ராஜன் ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் பொள்ளாச்சிக்கு குடிபெயர்ந்து குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார்.
ராஜனின் மகனான 23 வயதுடைய பிரவீன் குமாரும் அஸ்விதாவும் காதலித்து வந்துள்ளனர். பிரவீன் குமார் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இருவரும் ஒன்றாக சேர்ந்து வெளியில் சுற்றிய நிலையில் இவர்களின் காதல் பற்றி இரு வீட்டாருக்கும் தெரியவந்துள்ளது. ஒருவருக்கு ஒருவர் நன்றாக தெரிந்த குடும்பம் என்பதால் பெற்றோர் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் அஸ்விதா சிறிது காலமாக பிரவீன் குமாருடன் பேசுவதை நிறுத்தி விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அஸ்விதாவின் மீது கோபத்தில் இருந்துள்ளார் பிரவீன். இந்நிலையில் அஸ்விதா தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
நேற்று கண்ணன் வேலைக்கும். வனிதா உறவினர் வீட்டுக்கும். அஸ்விதாவின் தங்கை பள்ளிக்கும் சென்ற நிலையில் அஸ்விதா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை தெரிந்து கொண்ட பிரவீன் அஸ்விதாவின் வீட்டிற்கு சென்று தன்னிடம் பேசாததை பற்றியும் சமூக வலைத்தள பதிவுகளை பற்றியும் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரவீன் குமார் அஸ்விதாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
வேலை முடிந்து வீடு திரும்பிய கண்ணன் தனது மகளின் நிலையை பார்த்து அதிர்ச்சியடைந்து. உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். அங்கு அஸ்விதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கிராம போலீசார் அஸ்விதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் பிரவீன் குமார் பொள்ளாச்சி டவுன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். பின்னர் பிரவீனிடம் வாக்குமூலம் பெற்ற காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்