“மாணவியை காதலித்த பேருந்து ஓட்டுநர்” - சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டு மாணவி.. உறவினர் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை!

வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசாருக்கு மாணவி சுரேஷை காதலித்து வந்தது தெரியவந்துள்ளது
“மாணவியை காதலித்த பேருந்து ஓட்டுநர்” - சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டு மாணவி.. உறவினர் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை!
Published on
Updated on
1 min read

கோயம்பத்தூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் அன்னூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை சுரேஷ் காதலித்து வந்துள்ளார்.

இதனை அறிந்த பள்ளி நிர்வாகம் சுரேஷை வேலையை விட்டு அனுப்பியுள்ளனர். எனினும் தொடர்ந்து போனில் பேசிக் கொள்வது வெளியில் சந்தித்து கொள்வது என மாணவியும் சுரேஷும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசைவார்த்தை கூறி மாணவியை சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்.

சென்னையில் சுரேஷின் உறவினர் ஒருவர் வீட்டில் மாணவியும் சுரேஷும் தங்கியுள்ளார். வெளியில் சென்ற மகள் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் போலீசில் புகாரளித்துள்ளனர் மாணவியின் பெற்றோர். புகாரை ஏற்று வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசாருக்கு மாணவி சுரேஷை காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. பின்னர் சுரேஷும் ஊரில் இல்லாததை அறிந்த போலீசார் இருவரையும் தேடி வந்தனர். 

Admin

சுரேஷின் நண்பர்கள் அளித்த தகவல் மற்றும் செல்போன் சிக்னலை வைத்து இருவரும் சென்னையில் இருப்பதை அறிந்த அன்னூர் காவல் துறையினர். சென்னைக்கு விரைந்து சென்று மாணவியை மீட்டு சுரேஷை கைது செய்தனர். பின்னர் சுரேஷிடம் விசாரணை மேற்கொண்டதில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

எனவே சுரேஷ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார். சுரேஷை சிறையில் அடைத்துள்ளனர். மேலும் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்து அரசு தரப்பில் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com