சொந்த பேத்தியின் தோளில் கைபோட்டு.. அத்துமீறிய 70 வயது முதியவர்! உணவகம் என்றும் பாராமல் செய்த அருவருக்கத்தக்க செயல்

சிறுமியின் தாத்தா சிறுமியின் தோள்களைச் சுற்றித் தன் கையைப் போட்டு, அநாகரீகம் தொட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி நிறுத்தச் சொல்லியும் அந்த வயதானவர் கேட்கவில்லை.
Singapore child sexual assault case
Singapore child sexual assault case
Published on: 
Updated on: 
2 min read

2023-ம் ஆண்டில், 70 வயது முதியவர் ஒருவர் உணவகம் ஒன்றில் தனது சொந்த பேத்தியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதை நேரில் கண்ட அந்த கடையின் வாடிக்கையாளர் ஒருவர் கையும் களவுமாகப் பிடித்து கொடுத்து குழந்தையை காத்துள்ளார்.

கடந்த நவம்பர் 24 அன்று, பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டை அந்த சிறுமியின் தாத்தா ஒப்புக்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியைப் பாதுகாக்கும் பொருட்டு நீதிமன்றம் விதித்துள்ள தடையுத்தரவின் காரணமாகவும், சிறுமிக்கு சம்பவம் நடக்கும்போது 11 வயது மட்டுமே ஆகியிருந்ததால், பெயரை வெளியிடாமல் உள்ளனர். அந்த வயதானவருக்கு ஏழாண்டுகள் மற்றும் ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த நபருக்கு 50 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால், அவருக்குப் பிரம்படி கொடுக்க முடியாது. எனவே பிரம்படிக்கு பதிலாக, அவர் கூடுதலாக 16 வாரங்கள் சிறைத்தண்டனை அனுபவிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. 2023 செப்டம்பர் 29 அன்று, அந்த நபர் தனது மனைவி, மகன், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினருடன் டவுன்டவுன் ஈஸ்டில் இருந்துள்ளார். சந்தித்த பிறகு, அந்தக் குடும்பத்தினர் இரவு உணவிற்காகப் பிரிந்தது, வெவ்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். அங்கு அந்த வயதான நபர், பாதிக்கப்பட்ட சிறுமியையும் அவரது தம்பியையும் ஒரு மேற்கத்திய உணவகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். குடும்பத்தின் மற்றவர்கள் ஒரு சுஷி உணவகத்திற்குச் சென்றுள்ளனர்.

அந்த வெஸ்டர்ன் உணவகத்தில், அந்த வயதான நபர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அருகில் அமருத்துள்ளார். மேலும், சிறுமியின் தம்பி அவர்களுக்கு எதிரே அமர்ந்துள்ளார். உணவு வருவதற்காகக் காத்திருந்தபோது, ​​அந்த சிறுமியின் தம்பி தன் கைப்பேசியில் விளையாடிக் ஒண்டிருந்துள்ளார்.

அந்த சமயத்தில் சிறுமியின் தாத்தா சிறுமியின் தோள்களைச் சுற்றித் தன் கையைப் போட்டு, அநாகரீகம் தொட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி நிறுத்தச் சொல்லியும் அந்த வயதானவர் கேட்கவில்லை. பின்னர் அந்த வயதானவர் சிறுமியின் ஆடைக்குள் கைவைத்ததுடன் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

ஒருகட்டத்தில் அவர்களுடைய உணவு வருவதைக் கண்டபோதுதான் அந்த வயதானவர் நிறுத்தியுள்ளார். சாப்பிட்ட பிறகு, அந்த நபர் பாதிக்கப்பட்ட சிறுமியை மீண்டும் தொடுவதற்காக அவரது தோள்களைச் சுற்றித் தன் கைகளைப் போட்டுள்ளார். ஆனால், பயந்துபோன அந்தப் பெண், தன் தாயை அழைத்து சுஷி உணவகத்திற்கு அவருடன் வருமாறு கேட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

இந்த முழு சம்பவத்தினையும் மற்றொரு மேசையில் அமர்ந்திருந்த வாடிக்கையாளர் ஒருவர் பதிவு செய்தவண்ணம் இருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் புகார் அழைத்துள்ளார். அவரது அழைப்பிற்கு பதிலளித்த காவல்துறையினர், சுஷி உணவகத்திற்குச் சென்று கொண்டிருந்த அந்தப் பெண்ணை சந்தித்துள்ளனர்.

அவர்கள் சிறுமியை அணுகி, "எப்படி உணர்கிறாய்" என்று கேட்டுள்ளார்கள். அதற்குப் பதிலளிக்கும் விதமாக அந்த சிறுமி உடைந்து அழுதுள்ளார். சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர் பயத்துடனும் கோபத்துடனும் இருந்ததாகவும், அந்த வயதானவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தது மீண்டும் மீண்டும் அவருக்கு நியாபகம் வந்ததாகவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த சிறுமிக்கு ஆண்களைக் கண்டு பயம் ஏற்பட்டதாகவும், மற்றவர்களை நம்புவதில் சிரமம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், குற்றத்தின் தீவிரத்தைக் குறைக்கும் வகையில், அந்த வயதான நபரின் வழக்கறிஞர், அவர் முதல் முறை இதுபோன்ற குற்றத்தினை செய்துள்ளார் என்றும் அதற்காக அவர் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

இருப்பினும், அந்த நபர் குடும்பத்தின் நம்பிக்கைக்குத் துரோகம் செய்ததோடு, பொது இடத்திலேயும் குற்றங்களைச் செய்திருந்தார் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இறுதியில் அந்த நபருக்கு ஏழு ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனையும், எட்டு பிரம்படிகளும் விதிக்கப்பட்டன. அந்த நபருக்கு 50 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால், அவருக்குப் பிரம்படி கொடுக்க முடியாது என்பதால் பிரம்படிக்குப் பதிலாக அவர் கூடுதலாக 16 வாரங்கள் சிறைத்தண்டனை அனுபவிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.