“இந்த வயசுல எவன் உன்ன பாக்குறான்” - மருமகளை சந்தேகப்பட்டு வசைபாடி வந்த மாமியார்… கொலை செய்து சடலத்துடன் அமர்ந்திருந்த கொடூரம்!

வெள்ளையம்மாளும் அவரது மருமகளானவசந்தாவும் தனியாக வசித்து வந்திருக்கின்றனர்...
“இந்த வயசுல எவன் உன்ன பாக்குறான்” - மருமகளை சந்தேகப்பட்டு வசைபாடி வந்த மாமியார்… கொலை செய்து சடலத்துடன் அமர்ந்திருந்த கொடூரம்!
Published on
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் உள்ள கம்மாளன்குளம் காலனி மேலத்தெருவை சேர்ந்தவர் அருணாசலம். இவருடைய மனைவி 90 வயதுடைய வெள்ளையம்மாள். இந்த தம்பதிக்கு பழனி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். வெள்ளை அம்மாளின் மகள் மற்றும் மகனுக்கு திருமணமாகி அவர்களுக்கு பேரன் உள்ள நிலையில் வெள்ளையம்மாளின் கணவர் அருணாச்சலமும், பழனியும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்திருக்கின்றனர்.

எனவே வெள்ளையம்மாளும் அவரது மருமகளான 60 வயதுடைய வசந்தாவும் தனியாக வசித்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை வெள்ளையம்மாள் அவரது வீட்டில் முகம் மற்றும் உடம்பில் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்து கிடந்திருக்கிறார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். தகவலறிந்து உடனே தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதிராஜா, மற்றும் மானூர் இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெள்ளையம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

Admin

அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சந்தேகத்தின் பேரில் வீட்டில் இருந்த அவரது மருமகள் வசந்தாவை பிடித்து விசாரணை நடத்தியதில் மாமியாரை மருமகளே கொலை செய்தது உறுதியானது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது வசந்தாவை அவ்வப்போது அவரது மாமியார் வெள்ளையம்மாள் திட்டி வந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் வசந்த வயல் வேலைக்கு அல்லது வேறு எங்காவது வேலை நிமித்தமாக சென்று வரவோ அல்லது சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு வீட்டுக்கு வர கொஞ்சம் நேரமாகிவிட்டால், வெள்ளையம்மாள் சந்தேகப்பட்டு திட்டி வந்திருக்கிறார்.

இந்நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினமும் சம்பந்தமில்லாமல் “இந்த வயசுல எவன் உன்னை பாக்குறான்” என கேட்டு மருமகளை சந்தேகப்பட்டு திட்டியதால் ஆத்திரம் அடைந்த வசந்த மாமியாரை வீட்டில் இருந்த அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததாக வாக்குமூலம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து வசந்த மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கொக்கிரகுளம் மகளிர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com