
தெலுங்கானா மாநிலம் மெஹபூபாபத் அருகில் உள்ள மரிபேடா கிராமத்தை சேர்ந்த 42 வயதான கிசான். இவருக்கு காவ்யா என்ற மனைவியும் ரம்யா பல்லவி என்ற இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரம்யாவிற்கு திருமணம் செய்து வைத்த நிலையில் பல்லவி கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
பல்லவிக்கு அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்தது சுரேஷ் வீட்டில் தாய், தந்தைக்கும் பல்லவி வீட்டில் தாய் கவியாவிற்கும் தெரியவந்த நிலையில் மூவரும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பல்லவியின் தந்தை பல்லவிக்கு திருமணம் செய்ய வரன் பார்த்து வந்துள்ளார்.
எனவே தனது காதலை குறித்து பல்லவி கிசானிடம் தெரிவித்துள்ளார், சுரேஷ் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர் காதலுக்கு மறுப்பு தெரிவித்த கிசான். பல்லவியை கல்லூரியை விட்டு நிறுத்து வீட்டில் அடைத்து வைத்துள்ளார். இருப்பினும் பல்லவி சுரேஷிடம் போனில் பேசி வந்துள்ளார். இதனை கவனித்த கிசான் மிகுந்த ஆத்திரம் அடைந்துள்ளார்.
சுரேஷின் வீட்டிற்கு சென்ற கிசான் அவரை வீட்டுக்கு வெளியில் இழுத்து வந்து ஊரை விட்டுப் போகும்படி மிரட்டியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த சுரேஷை கிசான் அக்கம்பக்கத்தினர் முன்னிலையில் சரமாரியாக கீழே தள்ளி எட்டி உதைத்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் கிசானை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை அறிந்த பல்லவி தந்தையின் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார்.
ஏற்கனவே காதலுக்கு மறுப்பு தெரிவித்தது ஒரு பக்கம் எனில், தற்போது காதலனை அடித்தது பல்லவிக்கு தந்தையின் மீது ஆத்திரமடைய செய்துள்ளது. இதனால் பல்லவி தந்தையை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இரவு தனது அறையில் உறங்கிக் கொண்டிருந்த தந்தையை அதிகாலை 3 மணியளவில் கம்பி மற்றும் கத்தியை பயன்படுத்த பல்லவி சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் அதே அறையில் அமர்ந்து தந்தை துடிதுடிப்பதை வேடிக்கை பார்த்துள்ளார்.
கிசானின் அலறல் சத்தம் கேட்டு அவரது வீட்டிற்கு அருகில் வந்த அக்கம் பக்கத்தினர் பல்லவி மற்றும் கிசானை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பல்லவியை கைது செய்துள்ளனர். மேலும் கிசானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பெற்ற மகளே காதலனுக்காக தந்தையை கொன்றது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.