7 வயது சிறுவன் மரணம்.. நண்பனின் தாய் கைது! பாழடைந்த வீட்டில் நடந்தது என்ன?

"கிராம மக்களுடன் சேர்ந்து அந்த பெண் சந்தியாவும் தன் மீது சந்தேகம் வராதவாறு முத்துவேலை தேடியுள்ளார்.."
madurai child murder
Published on: 
Updated on: 
1 min read

மதுரை மாவட்டம், மேலூர் அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன், அருகிலுள்ள பாழடைந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சிறுவன் கொலை செய்யப்பட்டாரா அல்லது உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள தனியாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரிய கருப்பன். இவரது மனைவி சத்யா. இந்தத் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகளும், முத்துவேல் என்ற 7 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில் சிறுவன் முத்துவேல் ஞாயிற்றுக்கிழமை விளையாட சென்ற நிலையில், காணாமல் போயுள்ளார். எங்கு தேடியும் கிடைக்காத சிறுவன், ஒரு பாழடைந்த ஓட்டு வீட்டின் உள்ளே சடலமாக மீட்கப்பட்டார். 

இந்த நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். முத்துவேல் உடன் விளையாடிய நண்பர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் கழுத்தை நெரித்து விளையாடும் ஒரு விபரீதமான விளையாட்டில் சிறுவர்கள்  ஈடுபட்டதாகவும், அதனால் முத்துவேல் கழுத்தை மற்றும் ஒரு அதே வயதுடைய சிறுவன் கயிறு போட்டு நெரித்து விளையாடும் போது கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவனை அந்த சிறுவனின் வீட்டிற்கு அழைத்து சென்ற போது சிறுவன் முத்துவேல் மூச்சு திணறி இறந்து போனதாகவும் கூறப்படுகிறது. இதில் முத்துவேலின் கழுத்தை நெறித்த சிறுவனின் தாயார் சந்தியா என்பவர் இறந்த சிறுவன் முத்துவேலை தூக்கி கொண்டு அந்த பாழடைந்த ஓட்டு வீட்டில் உடலை போட்டு கொலை தடயத்தை மறைத்துள்ளார். பின்னர் சிறுவன் காணாமல் போனதாக தேடும் போது, கிராம மக்களுடன் சேர்ந்து அந்த பெண் சந்தியாவும் தன் மீது சந்தேகம் வராதவாறு முத்துவேலை தேடியுள்ளார்.

விசாரணையில் தெரிய வந்த இந்த விவரங்களை தொடர்ந்து தடயங்களை மறைத்த குற்றத்திற்காக கழுத்தை நெரித்த அந்த பையனின் தாய் சந்தியா மற்றும் அந்த சிறுவனையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் கீழவளவு காவல் நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார் .

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com