3 குழந்தைகள் கண்முன்னே பலாத்காரம் செய்த கொடூரம்! 'மரணதண்டனை' விதித்த நீதிமன்றம் - பாராட்டிய எலான் மாஸ்க்

குழந்தைகளின் கண்முன்னே துப்பாக்கி முனையில் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர்.
Lahore motorway rape case
Lahore motorway rape caseLahore motorway rape case
Published on
Updated on
1 min read

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர்-சியால்கோட் நெடுஞ்சாலையில், 2020-ம் ஆண்டு, ஒரு பிரெஞ்சுப் பெண்ணை அவரது குழந்தைகளின் கண்முன்னே துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட இருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை விதித்தது பாகிஸ்தான் நீதிமன்றம். விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக குற்றவாளிகள் செய்த மேல்முறையீடுகளை நிராகரித்து, லாகூர் உயர் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை (மே 03) உறுதி செய்தது.

2020 செப்டம்பரில் லாகூர்-சியால்கோட் நெடுஞ்சாலையில் அந்தப் பெண் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கு பாகிஸ்தான் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட 32 வயது தாய், தனது மூன்று பிள்ளைகளுடன் பயணம் செய்துகொண்டிருந்தபோது, ​​லாகூர் அருகே அவரது வாகனத்தில் எரிபொருள் தீர்ந்துள்ளது. அப்போது, ஆயுதம் ஏந்திய இரண்டு நபர்கள் காருக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, குடும்பத்தினரிடம் இருந்த பொருட்களைக் கொள்ளையடித்துள்ளனர். அதோடு மட்டும் நிறுத்தாமல் அப்பெண்ணை அருகிலுள்ள வயல்வெளிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, அவரது குழந்தைகளின் கண்முன்னே துப்பாக்கி முனையில் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. போராட்டக்காரர்கள் பாதிக்கப்பட்டவருக்கு நீதி கோரினர். மேலும், "தாக்குதலுக்கு அவரே காரணம்" என்று பரவலாகக் கருதப்பட்ட பஞ்சாப் காவல்துறை அதிகாரிகளின் பிற்போக்கு கருத்துக்களையும் போராட்டக்காரர்கள் விமர்சித்தனர்.

"நமது சமூகம் பெண்கள் இரவில் தனியாக வெளியே இருப்பதை அனுமதிப்பதில்லை" என்று கூறி, சம்பவத்திற்கு பாதிக்கப்பட்டவரே காரணம் எனக் குற்றம் சாட்டிய தலைமை காவல் புலனாய்வாளர் உமர் ஷேக்கைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

2020-ஆம் ஆண்டு லாகூரில் பிரெஞ்சுப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட இருவரின் மேல்முறையீடுகளை லாகூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், அவர்களுக்கு மரண தண்டனை விதித்த விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பையும் உறுதி செய்ததுள்ளது. மேலும், 2021 மார்ச் மாதம், லாகூரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம், அபித் அலி என்ற மல்ஹி மற்றும் ஷஃப்கத் அலி என்ற பக்கா ஆகிய குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்தது.

இதற்கு உலக பெரும்பணக்காரர் எலான் மஸ்க் தனது X தளத்தில் "பிராவோ பாகிஸ்தான், இதைத்தான் நாம் மேற்கத்தியநாடுகளிலும் செய்யவேண்டும் என்று பதிவிட்டிருந்தார். மேலும், பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினராக ரூபர்ட் ஜேம்ஸ் கிரஹாம் லோவ் பாகிஸ்தானிலிருந்து சில நல்ல செய்திகள் வந்துள்ளன என்று பதிவிட்டிருந்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com