"மதிய உணவில்.. உப்பு என நினைத்து டிடெர்ஜென்ட் பவுடர் சேர்ப்பு" - வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்ட 36 பள்ளி குழந்தைகள்!

சமையல்காரர் சலவைத்தூளை உப்பு எனத் தவறாக நினைத்து உணவில் சேர்த்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
detergent powder in midday meal
detergent powder in midday meal
Published on
Updated on
1 min read

கடந்த செவ்வாய்க்கிழமை மதியம், பீகார் அரசுப் பள்ளி ஒன்றில் மாணவர்கள் வழக்கம் போல் மதிய உணவு சாப்பிட வேண்டி கூடியுள்ளனர். மத்திய உணவை சாப்பிட மாணவர்கள் சிறிது நேரத்திலேயே, பலருக்குத் தலைசுற்றல் ஏற்பட்டு வாந்தி எடுக்கத் தொடங்கியதால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பீகாரின் நாலந்தா மாவட்டத்தில், ஒரு சமையல்காரர் மாணவர்களின் மதிய உணவில் உப்புக்குப் பதிலாக தவறுதலாக டிடர்ஜென்ட் பவுடரைச் சேர்த்ததால், குறைந்தது 36 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாளந்தாவின் நூர்சராய் காவல் நிலையப் பகுதியிலுள்ள பராசி நடுநிலைப் பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் பீகார் ஷரீஃப் சதர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பரிந்துரைக்கப்பட்ட உணவுப் பட்டியலின்படி, அன்றைய தினம் சோயாபீன் சாதம் அடங்கிய மதிய உணவு ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் வழங்கப்பட்டதாக முதல்வர் சைலேந்திர குமார் சிங் தெரிவித்துள்ளார். சில மாணவர்கள் ஏற்கெனவே சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ​​உணவில் உப்பு குறைவாக இருப்பதாக மற்ற மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சமையலறையில் உப்பு மற்றும் சலவைத்தூள் டப்பாக்கள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும், சமையல்காரர் சலவைத்தூளை உப்பு எனத் தவறாக நினைத்து உணவில் சேர்த்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனியத்தொடர்ந்து உணவை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே, பல மாணவர்களுக்குத் தலைசுற்றல் ஏற்பட்டு வாந்தி எடுக்கத் தொடங்கியுள்ளனர். ஆரம்பத்தில் அவர்களுக்குப் பள்ளியிலேயே மாணவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. ஆனால், அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் பின்னர் சதர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சிவில் சர்ஜன் டாக்டர் ஜெய பிரகாஷ் சிங் மருத்துவமனைக்குச் சென்று மாணவர்களின் உடல்நிலையை ஆய்வு செய்துள்ளார். மேலும் குழந்தைகள் அனைவரும் அபாயத்திலிருந்து மீண்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். பீகார் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஷ்ரவண் குமார் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களைச் சந்தித்துள்ளார். மேலும், அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் பேசியுள்ளார். மதிய உணவு தயாரித்து பரிமாறுவதில் கூறப்படும் குறைபாடு எப்படி ஏற்பட்டது? என்பதைக் கண்டறிய விரிவான விசாரணை நடத்தப்படும் என்று குமார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com