திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் வி.எஸ்.கோட்டை சில்வார்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி செல்வி.இவர்களது மகள் 23 வயதுடைய ராஜபிரியா .இவர் எம். டெக் படித்து முடித்துவிட்டு தற்போது வீட்டில் உள்ள நிலையில் வையாளிபட்டியைச் சேர்ந்தவர் முத்துராமன் என்பவரது மகனான 25 வயதுடைய பாலமுருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களது ப்லாமானது காதலாக மாறி இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் குறித்து அறிந்த ராஜபிரியாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
அதனை பொருட்படுத்தாத ராஜபிரியா காதலனுடன் சேர்ந்து வாழ நினைத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி பாலமுருகனுடன் சென்று விட்டார். பின்னர் இருவரும் நண்பர்கள் உதவியுடன் மதுரையில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு ர் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து போலீசார் சமரச பேச்சுவார்த்தைக்காக இருவரது பெற்றோர்களையும் காவல் நிலையம் வர வைத்தனர்.
அப்போது காவல் நிலையத்திற்கு வந்த ராஜ பிரியாவின் பெற்றோர் தங்களது மகள் காதல் கணவனுடன் இருப்பதை பார்த்ததும் கதறி அழுதனர். “படிக்க வைத்து ஆளாக்கி அழகு பார்த்த எங்களுக்கு இப்படி ஒரு துரோகம் செய்து விட்டாயே.. அவன் வேணாம்.. எங்க கூட வந்துடுமா ” எனக் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.அப்போது அவர்கள் தங்களது மகளை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து செல்வதற்கு முயற்சி நிலையில் அதற்கு ராஜ பிரியா மறுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை ராமச்சந்திரன்,தாய் செல்வி மகள் ராஜபிரியாவின் காலை பிடித்து எங்களுடன் வீட்டுக்கு வந்துவிடு என்று கெஞ்சியபடி கதறி அழுதனர்.
இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்ட நிலையில் போலீசார் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் காவல் நிலையத்திற்குள் அழைத்து சென்றனர். இதையடுத்து சாணார்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் ராஜ பிரியாவின் விருப்பத்தின் பேரில் இருவரும் சட்டப்படி மேஜர் என்பதால் அவரது கணவன் பாலமுருகனுடன் அனுப்பி வைத்தனர். இதனையடுத்து ராமச்சந்திரன், மனைவி செல்வி மற்றும் அவர்களது உறவினர்கள் அங்கிருந்து அழுதபடியே வீட்டுக்கு சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்