“ஆணுறுப்பு அறுக்கப்பட்டு குளத்தில் மிதந்த சடலம்” - நண்பனே வாலிபரை கொன்ற கொடூரம்… ஓரின சேர்க்கையில் நடந்த விபரீதம்!

இருவரும் அவ்வப்போது ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று இருவரும் மது அருந்திவிட்டு....
“ஆணுறுப்பு அறுக்கப்பட்டு  குளத்தில் மிதந்த சடலம்” - நண்பனே வாலிபரை கொன்ற கொடூரம்… ஓரின சேர்க்கையில் நடந்த விபரீதம்!
Published on
Updated on
2 min read

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கே. அத்திக்கோம்பை பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் 25 வயதுடைய பெருமாள். இவர் ஒன்பதாம் வகுப்பு வரை படித்து முடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஹாலோ பிளாக் கம்பெனியில் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த (ஜன 30) ஆம் தேதி இரவு 8.00 மணி அளவில் கடைக்கு சென்று சம்பள பணம் வாங்கி வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியவர் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை, பின்னர் அவரின் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது செல்போனை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எடுத்து பேசியுள்ளார்.

மேலும் அவர் பெருமாள் என்பவர் பள்ளப்பட்டி பகுதியில் பேருந்தில் இருந்து மயங்கி கீழே விழுந்து விட்டதாகவும் வந்து அவரை தூக்கிச் செல்லுங்கள் என்றும் கூறிவிட்டு போனை சுவிட்ச் ஆப் செய்திருக்கிறார். இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அதிகாலையில் ஒட்டன்சத்திரம், பள்ளபட்டி, இடையகோட்டை, உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் தேடி பார்த்த போது வாலிபர் பெருமாலின் உடல் ஒட்டன்சத்திரத்தில் இருந்து இடையகோட்டை செல்லும் சாலையில் ஜவ்வாதுபட்டி அருகே உள்ள நங்காஞ்சி ஆற்றுப் பாலத்தின் அடியில் ஆணுறுப்பு வெட்டப்பட்டு, தலையில் மீது கல் வைக்கப்பட்டு, உயிரிழந்த நிலையில் தண்ணீருக்குள் மிதந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

Admin

பின்னர் உடனடியாக இது குறித்து இடையகோட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்ட இடையகோட்டை காவல் துறையினர் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் உயிரிழந்த இளைஞர் பெருமாளின் கொலைக்கான காரணம் குறித்தும் கொலையாளிகள் குறித்தும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் பெருமாளுடன் ஹலோ பிளாக் கம்பெனியில் பணிபுரிந்த ஸ்ரீதர் என்பவரை போலீசாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்ததை ஸ்ரீதர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் இருவரும் அவ்வப்போது ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று இருவரும் மது அருந்திவிட்டு ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்தது தெரியவந்தது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com