"மாற்றுத்திறனாளி பெண் என்றும் பாராமல்.. வாயை மூடி சீரழித்த கொடூரன்!" தீப்பெட்டிக் கேட்பது போல் வீட்டிற்குள் நுழைந்த காமுகன்.. தர்மஅடி கொடுத்த பகுதி மக்கள்

மாற்றுத்திறனாளி பெண் என்று கூட பாராமல் அவர் வாயை மூடி கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்து அங்கிருந்து சென்றுள்ளார்.
Kanchipuram crime news
Kanchipuram crime newsKanchipuram crime news
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரம் மாவட்ட வாலாஜாபாத் அருகே உள்ள அங்கம்பாக்கம் பகுதியில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியை சார்ந்த 30 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி பெண் தனது தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். இவர் நடமாட முடியமால் படுத்த படுக்கையாகவே இருந்துவருகிறார். இந்நிலையில் அவரது தனது தாய்,தந்தை ஆகியோர் மாடு மேய்க்க வெளியில் சென்றுள்ளனர். மேலும், அதே பகுதியை சார்ந்த பாலகிருஷ்ணன் என்பவன் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் தீப்பெட்டி கேட்பது போல் வீட்டிற்குள் வந்துள்ளார். உள்ளே வந்த அவர் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பேச முயன்றுள்ளார்.

அப்போது,வீட்டில் தாய்,தந்தை இல்லாததை அறிந்து கொண்ட பாலகிருஷ்ணன் மாற்றுத்திறனாளி பெண் என்று கூட பாராமல் அவர் வாயை மூடி கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்து அங்கிருந்து சென்றுள்ளார். பின்னர், வேலையை முடித்து அப்பெண்ணின் தாய் மற்றும் தந்தை இருவரும் வெற்றிக்கு வந்துள்ளனர். வீட்டிற்கு வந்த தாய் மற்றும் தனது அண்ணன்களிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்த போது , உடனடியாக பாலகிருஷ்ணனை பிடித்து குடும்பத்தினர் அடித்துள்ளனர்.

இதுக்குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் பொதுமக்களும் பாலகிருஷ்ணனுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். காவல் உதவி எண்ணான 100க்கு அழைத்து நடந்த சம்பவத்தை குறித்து ஊர் மக்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணும் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பாலகிருஷ்ணனை கைது செய்து போலிசார் அழைத்து சென்றுள்ளனர். மேலும்,அருகில் உள்ள பொதுமக்களும் பெண் பிள்ளைகளுடன் வசித்து வருவதால் தங்களுக்கு பெரும் பயம் உள்ளதால் "அவன் வெளியே வராது வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என பொதுமக்களும் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். எழுந்து கூட நடக்க முடியாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com