“திமுக கவுன்சிலர் மகன் அட்ராசிட்டி” - மணல் கொள்ளையை தட்டி கேட்ட இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்!

இருவரும் ரத்த காயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்..
thiruvannamalai
Published on
Updated on
1 min read

திருவண்ணாமலை சந்தை மேடு பகுதியில் வசிப்பவர் 28வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் பழனி. இவரது மகன் கிஷோர். இவர்கள் மணல் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சந்தை மேடு பகுதிக்கு அருகே உள்ள சமுத்திரம் ஏரியில் இருந்து, அடிக்கடி ஏரி மண் எடுத்து உரிய அனுமதியின்றி பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இதை அறிந்த அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உரிய அனுமதியின்றி ஏரியிலிருந்து ஏன் மண் எடுக்கிறீர்கள்? என்று பலமுறை கேட்டுள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் உரிய அனுமதி பெற்று அந்த ஏரியில் மண்ணெடுக்க சென்றாலும் திமுக கவுன்சிலர் தரப்பிலிருந்து இளைஞர்களுக்கு மிரட்டல் வருவது வாடிக்கையாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு சந்தைமேடு பெரும்பாக்கம் சாலையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த அந்த அப்பகுதி இளைஞர்களை தக்கியுள்ளனர். திமுக கவுன்சிலர் பழனியின் மகன் கிஷோர் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த திருமால் மற்றும் பிரபு ஆகிய இரண்டு இளைஞர்களை இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

மேலும் கவுன்சிலர் மகன் கிஷோருடன் வந்த பிரவீன், விக்கி, சதீஷ், மோகன் உள்ளிட்ட பல நபர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து திருமால் மற்றும் பிரபு ஆகியோரை சரமாரியாக தாக்கும் வீடியோ கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவாகியுள்ளது. இதனால் திருமால் மற்றும் பிரபு ஆகியோர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அதையடுத்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட திருமால் மற்றும் பிரபு இருவரும் ரத்த காயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தங்களை கொலை வெறி தாக்குதலுடன் அடித்த கிஷோர் மற்றும் அவரது நண்பர்களை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com