“செல்போனில் மூழ்கி கிடந்த மனைவி” - கணவனுக்கு ஏற்பட்ட சந்தேகம்… கொலையில் முடிந்த காதல் திருமணம்!

உடனே அக்கம் பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது ஸ்வேதா கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்
husband killed wife
Published on
Updated on
1 min read

புதுச்சேரியில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்தவர் ஏழுமலை என்கிற சூர்யா (வயது 24). மெக்கானிக். இவருக்கும் புதுச்சேரி மூலக்குளத்தைச் சேர்ந்த சுவேதா (21) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அதையடுத்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதி ஜீவானந்தபுரத்தில்  வீடு எடுத்து இருவரும் வசித்து வந்தனர். ஏழுமலை அதேபகுதியில் இருசக்கர வாகன மெக்கானிக் வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. 

இந்த நிலையில் இன்று காலை சூர்யா வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே அக்கம் பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது ஸ்வேதா கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தன்வந்திரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலமாக கிடந்த சுவேதாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதை தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மனைவி நடத்தை மீது சந்தேகம் அடைந்த சூர்யா அவரிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது. சுவேதா அதிக நேரம் செல்போனில் பேசிக் கொண்டும், சாட்டிங் செய்து கொண்டும் இருந்துள்ளார். இதனால் ஏழுமலைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதை கண்டிக்கும் விதமாக, சுவேதாவை செல்போனில் பேச, சாட்டிங் செய்ய ஏழுமலை தடை போட்டுள்ளார். ஆனாலும் சுவேதா அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து செல்போனில் மூழ்கி கிடந்துள்ளார். இதனால் இருவருக்குமே இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை ஏழுமலை தூங்கி எழுந்த போது, சுவேதா செல்போனை பார்த்து கொண்டிருப்பதை பார்த்த கணவர் கோபம் அடைந்துள்ளார். கண்டித்தும் கேட்காததால் ஆத்திரம் அடைந்த ஏழுமலை மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதையடுத்து, செல்போன் சார்ஜர் ஒயரால்  மனைவியின் கழுத்தை சுற்றி இறுக்கி உள்ளார் ஏழுமலை. தடுக்க முயன்ற சுவேதாவை, கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

முதற்கட்ட விசாரணைக்கு பின் ஏழுமலை கைது செய்ய போலீசார் அவரை திடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏழுமலை கிடைத்த பிறகே கொலைக்கான முழு காரணம் தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கணவன் மனைவியை கழத்தறுத்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com