வீட்டில் தனியாக இருந்த மகள்.. 4 மாதங்களாக அத்துமீறிய தாயின் கள்ளகாதலன்! கொலை மிரட்டல் விடுத்தது பாலியல் சீண்டல்

4 மாதங்களாக தவறாக பேசி வந்ததாகவும், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.
POCSO Act
POCSO Act
Published on
Updated on
1 min read

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்தில் உள்ள மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரு கிராமப் பகுதிதான் எர்ணாபுரம். அப்பகுதியை சேர்ந்தவர் 39 வயதான மாதையன். 34 வயதுடைய கணவனை இழந்த பெண்ணும் தனது 16 வயது மகளுடன் அதே பகுதியில் வசித்து வந்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. மாதையன் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், அந்த பெண்ணின் 16 வயது மகள் கடந்த 3 வாரங்களாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்து, பள்ளிக்கு செல்ல மறுப்பது குறித்து தாய் தன் மகளிடம் விசாரித்துள்ளார். அப்போதுதான் அவரது மகள் திடுக்கிடும் உண்மையை கூறியுள்ளார். மாதையன் கடந்த 4 மாதங்களாக தன்னிடம் தவறாக பேசி வந்ததாகவும், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து வெளியே சொன்னால் தனது தாயை கொலை செய்துவிடுவதாகவும் மாதையன் சிறுமியை மிரட்டியதாக தன் தாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், மாதையன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

மகுடஞ்சாவடி அருகே தாயுடன் பழகி வந்ததோடு மகளையும் சீரழித்த, தாயின் காதலனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com