முன்விரோதம் காரணமாக... சித்திரை திருவிழாவில்...!!

முன்விரோதம் காரணமாக... சித்திரை திருவிழாவில்...!!
Published on
Updated on
1 min read

சித்திரைத் திருவிழாவில் நடந்த கோஸ்தி மோதலை முன்னிட்டு முன்விரோதத்தின் காரணமாக மதுரை ஜெயந்தி புறத்தை சேர்ந்த இளைஞரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்துள்ளனர்.

மதுரையில் வெகு விமர்சனையாக நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் பொழுது இரண்டு கோஷ்டி கிடையே கடுமையான மோதல் என்பது நடைபெற்றது அந்த சம்பவத்தின் முன் விரோதத்தின் காரணமாக மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலை அழகுபுரத்தை சேர்ந்த ஆனந்த குமார் என்பவரை மதுரை மீனாட்சி திரையரங்கு பகுதியில் ஓட ஓட விரட்டி ஐந்து பேர் கொண்ட கும்பல் சராசரியாக வெட்டி தப்பி விட்டு சென்றுவிட்டனர்.

சம்பவ இடத்திலேயே ஆனந்தகுமார் என்பவர் துடிதுடித்து உயிரிழந்து போனார்.  இதனை அறிந்த தெற்கு வாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு பணிக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யார் எதற்காக இந்த கொலை நடந்துள்ளது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர் ஒரு இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com