சென்னை மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை பகுதியில் உள்ள கணேஷ் நகரை சேர்ந்தவர் 40 வயதுடைய திருநாவுக்கரசு. இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியில் சிலம்பம் பயிற்சி அளித்து வருகிறார். திருநாவுகரசிடம் சுமார் 40 சிறுவர், சிறுமியர் சிலம்பம் பயிற்சி பெற்று வரும் நிலையில் அவர்களுக்கு தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிலம்பம் பயிற்சி எடுத்து வந்தார். மேலும் அவ்வப்போது சிறப்பு மற்றும் திருவிழா நாட்களில் இவரது மாணவர்களுடன் சிலம்பம் நிகழ்ச்சி நடத்துவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.
அதே போல கடந்த தைப்பூசம் அன்று சென்னை ஈசிஆர் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் தைப்பூசம் கொண்டாடும் வகையில் திருநாவுக்கரசு தலைமையில் சிலம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அவரிடம் பயிற்சி எடுத்த சில மாணவ மாணவிகள் பங்கேற்ற நிலையில் நிகழ்ச்சி முடிந்து அனைத்து மாணவர்களும் வீடு சென்ற நிலையில் நீலாங்கரையில் வசித்து வரும் 15 வயதான பத்தாம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஒருவர் வீட்டிற்கு செல்ல வாகனம் எதுவும் இல்லாத சூழலில் பேருந்திற்காக காத்திருந்திருக்கிறார்.
அப்போது மாணவியை கவனித்த சிலம்பம் பயிற்சியாளர் திருநாவுகரசு “நானும் உங்க வீட்டு வழியா தான் போறேன் உன்னை அப்படியே வீட்டில் விட்டுறேன்” என கூறி மாணவி மறுத்த போதிலும் அவரை தனது இருசக்கர வாகனத்தில் வற்புறுத்தி ஏற்றி சென்றிருக்கிறார். அப்போது பாதி வழியில் சிறுமியின் காலின் மீது கை வைத்து தடவியிருக்கிறார். பின்னர் மாணவி இது குறித்து கேட்ட நிலையில் தெரியாமல் கை பட்டு விட்டது என தெரிவித்திருக்கிறார்.
பின்னர் மீண்டும் திருநாவுக்கரசு மாணவியை தடவிய நிலையில் சத்தமிட்டு மாணவி தன்னை இறக்கி விடுமாறு கேட்டிருக்கிறார். ஆனால் வண்டியை நிறுத்தாத திருநாவுக்கரசு தொடர்ந்து சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார். அதனை தொடர்ந்து மானவை கத்தி கூச்சலிட்ட நிலையில் அவரை இறக்கிவிட்டு பயிற்சியாளர் அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார். உடனடியாக வீட்டிற்கு சென்ற மாணவி இது குறித்து பெற்றோரிடம் தகவல் தெரிவித்த நிலையில் போலீசாரிடம் புகாரளித்தனர். தகவல் அறிந்த நீலாங்கரை அணைத்து மகளிர் காவல் துறையினர் திருநாவுக்கரசை கைது செய்து போக்சோ வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.