“கணவரின் உறவினருடன் கள்ளத் தொடர்பில் இருந்த மனைவி ” - கொலைக்கு பக்காவாக பிளான் போட்ட மனைவி… மறுநாள் நடந்த கொடூர சம்பவம்!

சம்பவத்தன்று சந்திரசேகரன் என்பவருடன் உயிரிழந்த சுப்பிரமணியன் சென்றது தெரியவந்தது...
“கணவரின் உறவினருடன் கள்ளத் தொடர்பில் இருந்த மனைவி ” - கொலைக்கு பக்காவாக பிளான் போட்ட மனைவி… மறுநாள் நடந்த கொடூர சம்பவம்!
Published on
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆலிவலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீராந்தி வடிகால் அருகே 45 வயதுடைய மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து திருத்துறைப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் பவானியா மற்றும் கோட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் மோகன் ஆகியோர் நேரடியாக சென்று சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மோப்ப நாய் உதவியுடன் முதற்கட்டமாக உயிரிழந்தவர் பொன்னீரை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பதை கண்டறிந்தார். அதனைத் தொடர்ந்து கீராந்தி அருகே உள்ள சிசிடிவி காட்சியை சோதனை செய்ததையடுத்து சம்பவத்தன்று சந்திரசேகரன் என்பவருடன் உயிரிழந்த சுப்பிரமணியன் சென்றது தெரியவந்தது. இதனால் காவல்துறையினர் சந்திரசேகரனை குறித்து விசாரணை செய்ததில் அவர் தஞ்சாவூர் மாவட்டம் புஞ்சையூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது சந்திரசேகரனும் சுப்ரமணியும் உறவினர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினர் விசாரணையை தீவிர படுத்திய நிலையில் சந்திரசேகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்த சுப்பிரமணியன் மனைவி இந்திராவுக்கும் சந்திரசேகருக்கும் திருமணத்திற்கு மீறிய உறவு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்த நிலையில் அதனை அறிந்த சுப்பிரமணியன் சந்திரசேகரிடம் “நம்பி தானே வீட்டுக்குள்ள விட்டேன் எனக்கே இப்படி துரோகம் பண்ணிட்டியே” என தனது மனைவியையும் சந்திரசேகரையும் கண்டித்திருக்கிறார். அதனை தொடர்ந்து இந்திராவை தினந்தோறும் அடித்து துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த இந்திரா மற்றும் சந்திரசேகர் ஆகியோர் சுப்பிரமணியனை கொல்ல திட்டம் தீட்டி உள்ளனர். அதன்படி சுப்ரமணியனை சந்திரசேகரன் மது அருந்துவதற்காக காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் இருவரும் மது அருந்திவிட்டு ஒரே இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்திருக்கின்றனர் அப்பொழுது வீட்டுக்கு வரும் வழியில் அதிக மது போதையில் இருந்த சுப்பிரமணியை தலையில் கல்லை போட்டு வாய்க்காலில் தள்ளி விட்டு கொலை செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சந்திரசேகரன் மற்றும் சுப்பிரமணியன் மனைவி இந்திரா ஆகிய இருவரையும் ஆலிவலம் காவல் துறையினர் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர். கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com