1100 போதை மாத்திரைகள், 300 ஊசிகள் பறிமுதல்... நால்வர் கைது...

சென்னை ஓஎம்ஆர் சாலையில் போதை மாத்திரை மற்றும் ஊசிகளுடன் சுற்றித்திரிந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 1100 போதை மாத்திரை, 30 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
1100 போதை மாத்திரைகள், 300 ஊசிகள் பறிமுதல்... நால்வர் கைது...
Published on
Updated on
1 min read

சென்னை: செம்மஞ்சேரி பகுதியில் பள்ளிக்கரணை மதுவிலக்கு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தபோது செம்மஞ்சேரி தனியார் கல்லூரி எதிரில் இரண்டு இருசக்கரவாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக வந்த நான்கு நபர்களை மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரனாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அதில் போதை மாத்திரைகள், ஊசிகள்  இருந்ததை கண்ட போலீசார் இவர்கள் போதை மாத்திரைகளை விற்கும் கும்பல் என்பதல் நான்கு பேரையும் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்த 22-வயதான அரிஹரசுதன், குன்றத்தூரை சேர்ந்த 25-வயதான வினோத், பழைய பெருங்களத்தூரை சேர்ந்த 20-வயதான சஞ்சய், சென்னை சைதாபேட்டையை சேர்ந்த 25-வயதான அரவிந்த் என்பது தெரியவந்துள்ளது.

இவர்களிடமிருந்து ரூபாய் மதிப்பிலான 1100 போதை மாத்திரைகள் (Nitravet tablets), 30 ஊசிகள் மற்றும் 4 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பணத்தை அனுப்பி ஆன்லைனில் ஆர்டர் செய்தால் டெல்லியில் இருந்து சென்னைக்கு போதை தரக்கூடிய வலி நிவாரணி ணேணாத்திரை மற்றும் ஊசிகள் வரும் என கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த செம்மஞ்சேரி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com