
பெரம்பலூர் மாவட்டம் வசிஷ்டகுடி பகுதியை சேர்ந்தவர் 40 வயதான வெங்கடேசன். இவருக்கு 12 வயதில் தனுஷ் என்ற மகன் இருக்கும் நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேசனின் மனைவி நீலா உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துள்ளார்.
தாயாயை இழந்த தனுஷ் தனது அம்மா வழி தாத்தா பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேசன் வசிஷ்ட குடியில் தனியாக வசித்து வந்துள்ளார். வெங்கடேசனின் தம்பியான 33 வயதான பெருமாள் தங்களது பூர்வீக நிலத்தை விற்க எண்ணி அண்ணனிடம் அனுமதி கேட்டுள்ளார். தம்பியிடம் ஒரு லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு நிலத்தை விற்க ஆவணத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்ட வெங்கடேசன்.
வெகு நாட்கள் ஆகியும் ஆவணத்தில் கையெழுத்து போடாமல் தம்பியை அலைக்கழித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கோபத்தில் இருந்த பெருமாள் வெங்கடேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் வெங்கடேசன் பெருமாளை அரிவாளை கொண்டு கை கால்கள் கழுத்து போன்ற இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பெருமாளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பெருமாள் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். வெங்கடேசன் மற்றும் பெருமாளின் தந்தை ஆதிமூலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில் தாய் கருத்த மணி இருவரையும் தனியாக வளர்த்து ஆளாக்கி, தற்போது பெருமாள் வீட்டில் தங்கி வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்