“நான் என் பொண்டாட்டிய சாவடிச்சிட்டேன்” - திருமணம் செய்யாமல் கணவன் மனைவியாக வாழ்ந்த தம்பதி.. சுத்தியலால் அடித்து கொல்லப்பட்ட சாந்தி!

ராஜேந்திரனுக்கு தனது காதலி சாந்தியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு தினமும் அவருடன் சண்டையிட்டு...
“நான் என் பொண்டாட்டிய சாவடிச்சிட்டேன்” - திருமணம் செய்யாமல் கணவன் மனைவியாக வாழ்ந்த தம்பதி.. சுத்தியலால் அடித்து கொல்லப்பட்ட சாந்தி!
Published on
Updated on
1 min read

சென்னை அண்ணாநகர் கிழக்கு சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் 54 வயதுடைய சாந்தி. இவரது முதல் கணவர் ஏகாம்பரம் கடந்த 2010 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். இதனை அடுத்து சாந்தி தனது மகனுடன் தனியாக வசித்து வந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு முதல் அதே பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ராஜேந்திரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி சாந்தி முதியவர் ராஜேந்திரனை திருமணம் செய்து கொள்ளாமல் கணவன் மனைவி போல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. ராஜேந்திரனுக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ள மற்றும் மனைவி உள்ள நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் தனது மனைவி பிள்ளைகளை பிரிந்து சாந்தியுடன் வாழ்ந்து வந்தார்.

ராஜேந்திரன் வயது மூப்பு காரணமாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த நிலையில் சாந்தி தெருத் தெருவாக சென்று புடவை வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தி வந்திருக்கிறார். இந்த தொழில் முதலீடு செய்வது காரணமாக சாந்தி பலரிடம் பணத்தை கடனாக வாங்கி அதனை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி வந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து சண்டை போட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக சாந்திக்கும் ராஜேந்திரனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் ராஜேந்திரனுக்கு தனது காதலி சாந்தியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு தினமும் அவருடன் சண்டையிட்டு வந்துள்ளார்.

நேற்றிரவு வழக்கம் போல் இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டதை அடுத்து சாந்தி ராஜேந்திரனை திட்டிவிட்டு அறைக்கு தூங்க சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் இன்று அதிகாலை 3 மணியளவில் அறையில் தூங்கி கொண்டிருந்த சாந்தியை சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார். இதில் சாந்தி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் ராஜேந்திரன் நேராக அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு சென்று “நான் என் பொண்டாட்டிய சாவடிச்சிட்டேன்” என கூறி சரணடைந்தார்.

இதனை தொடர்ந்து விசாரணை நடத்திய அண்ணா நகர் காவல்துறையினர் ராஜேந்திரன் அளித்த தகவலின் அடிப்படையில்சாந்தி வீட்டிற்கு சென்று இறந்து கிடந்த அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் ராஜேந்திரனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் செய்துகொள்ளாமல் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்த ராஜேந்திரன் சாந்தியை சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com