சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தாம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல தனது தாயுடன் பேருந்து மூலம் தாம்பரம் வந்துள்ளார். தாம்பரம் பேருந்து நிலையத்தில் இறங்கிய அந்த இளம் பெண் நடைபாதையில் நடந்து சென்று கொண்டு இருந்துள்ளது. அப்பொழுது எதிர் பக்கமாக வந்த 50 வயதுடைய நபர் ஒருவர் இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார். உடனடியாக சுதாரித்து கொண்ட இளம்பெண் அவரது கையை தட்டிவிட்டு முதியவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
அப்போது முதியவர் எதுவும் செய்யவில்லை என வாக்குவாதம் செய்ததால் ஆத்திரமடைந்த இளம்பெண் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இருப்பினும் முதியவரை “நீ என் பொண்ணு மாறி ஏதோ தெரியாம பட்டுடுச்சி” என கூறியிருக்கிறார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த இளம்பெண் “உன் பொண்ணா இருந்த இந்த இடத்துல தான் தொடுவியா” என கேட்டு தாக்கியதை கவனித்த அப்பகுதியினர் இளம் பெண்ணுக்கு ஆதரவாக முதியவரை கண்டித்துள்ளனர்.
மேலும் அப்பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவரிடம் விசாரணை செய்ததில் அவரை மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணையின் போது முதியவர் இளம் பெண்ணின் காலில் விழுந்து தன் மீது புகாரளிக்கவேண்டாம் தெரியாமல் செய்து விட்டேன் என நடக்காடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் முதியவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த தங்கதுரை என்பதும் தாம்பரம் பகுதியில் சமையல் வேலை செய்து வருவதும் தெரியவந்துள்ளது. மேலும் தினமும் அவர் உளுந்தூர் பேட்டையில் இருந்து பேருந்து மூலம் தாம்பரம் பேருந்து நிலையம் வந்து பின்னர் அங்கிருந்து அவர் சமைக்கும் இடத்திற்கு நடந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.