தெலங்கானாவில் 'டிராகன்' பட காட்சியை நிஜமாக்கிய பொறியாளர் - 15 நாளில் தட்டித் தூக்கிய 'இன்ஃபோஸில்' - செம தில்லுப்பா உமக்கு!

மோசடி முயற்சிகள் ஒரு தற்காலிக வெற்றியை கொடுக்கலாம், ஆனா அதோட விளைவுகள் வாழ்க்கையை பாதிக்கிற அளவுக்கு பெருசா இருக்கும்.
drogan scam
drogan scam
Published on
Updated on
2 min read

தெலங்கானாவைச் சேர்ந்த ஒரு இளம் பொறியாளர், தமிழ் சினிமாவின் ‘டிராகன்’ படத்துல வர்ற மோசடி காட்சிகள் போல, இன்ஃபோசிஸ் நிறுவனத்துல வேலை வாங்க முயற்சி செய்து, வெறும் 15 நாளில் பிடிபட்ட சம்பவம் இப்போ பேசுபொருளாகியிருக்கு.

கெட்டிக்காரர்.. ஆனா?

ராபா சாய் பிரசாந்த், தெலங்கானாவைச் சேர்ந்த ஒரு இளம் மென்பொருள் பொறியாளர். படிப்புல கெட்டிக்காரரா இருந்தாலும், ஆங்கில பேச்சுத் திறன்ல கொஞ்சம் பின்னடைவு இருந்தவர். பல முன்னணி நிறுவனங்களோட நேர்காணல்களை இந்தக் குறை காரணமா கடந்து போக முடியாம தவிச்சிருக்கார். இன்ஃபோசிஸ் மாதிரி ஒரு பெரிய நிறுவனத்துல வேலை வாங்கணும்னு ஆசைப்பட்டவர், ஒரு வேலை தேடல் தளம் மூலமா தன்னோட விண்ணப்பத்தை சம்ப்ரதா சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ்னு ஒரு Manpower Consultancy-க்கு அனுப்பினார். அந்த நிறுவனத்தோட மேலாளர் சிவ பிரகாஷ், ஆவணங்களை சரிபார்த்து இன்ஃபோசிஸுக்கு அனுப்பினார்.

இதுவரை எல்லாம் சரியாத் தான் போயிட்டிருந்தது. ஆனா, நேர்காணல் நேரத்துல பிரசாந்த் வைத்த ட்விஸ்ட் யாரும் எதிர்பார்க்காதது. தன்னோட நண்பருடைய குரலை தனது நேர்காணலுக்கு பயன்படுத்திக் கொண்டார். நண்பரின் குரல் மூலம், ஆங்கிலத்துல நன்றாக பேசி, தொழில்நுட்ப கேள்விகளுக்கு சரளமா பதில் சொல்லி, இன்ஃபோசிஸோட நேர்காணல் குழுவை கவர்ந்தார். இதோட, ஜனவரி 20, 2025-ல இன்ஃபோசிஸ் ஆஃபர் லெட்டர் கிடைச்சது. பிரசாந்த், இந்த வேலையை பிடிச்சு, ஆஃபிஸ்ல சேர்ந்தார். ஆனா, இந்த மோசடி சாகசம் 15 நாளுக்கு மேல தாக்குப் பிடிக்கலை.

மாட்டிக்கொண்டது எப்படி?

பிரசாந்த் வேலையில் சேர்ந்த பிறகு, இன்ஃபோசிஸ் ஊழியர்களுக்கு ஒரு சந்தேகம் தோணியிருக்கு. நேர்காணலில் ஆங்கிலத்துல பொளந்து கட்டினவர், ஆஃபிஸ்ல வேலை பார்க்கும்போது ஏனோ தடுமாறினார். அவரோட பேச்சு, நேர்காணலில் காட்டின திறமைக்கு பொருத்தமே இல்லை. “இது வேற யாரோ மாதிரி இருக்கே?”னு யோசிச்ச இன்ஃபோசிஸ் HR குழு, உடனே விசாரணையை ஆரம்பிச்சது.

நேர்காணல் வீடியோவையும், ஆவணங்களையும் எடுத்து, பிரசாந்தோட தற்போதைய குரலோடு ஒப்பிட்டு பார்த்தாங்க. அப்போ தான் உண்மை தெரியவந்தது – நேர்காணலின் போது கேட்ட குரல் வேற.. ஒரிஜினல் பிரஷாந்த் குரல் வேற என்பது. இந்த மோசடி திட்டம் அம்பலமானதும், இன்ஃபோசிஸ் உடனே பிரசாந்தை வேலைல இருந்து நீக்கியது. அடுகோடி காவல் நிலையத்துல புகார் கொடுக்கப்பட்டு, தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவுகள், பாரதிய நியாய சன்ஹிதாவின் 318 (மோசடி) மற்றும் 319 (பிறர் வேடமிடல்) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

‘டிராகன்’ படத்தோட தாக்கம்

இந்த சம்பவத்தை சமீபத்தில் ‘டிராகன்’ படத்தோட கதையோட ஒப்பிடுறாங்க. அந்தப் படத்துல வர்ற ஹீரோ, டிகிரி வாங்காம மோசடி செய்து ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேருவது போல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். பிரசாந்த், இந்தப் படத்தோட ஐடியாவை நிஜமாக்க முயற்சி பண்ணார். ஆனா, சினிமாவுல வேலைக்காகும் ட்ரிக், நிஜ வாழ்க்கையில் இன்ஃபோசிஸோட HR குழுவுக்கு முன்னாடி தோல்வியடைஞ்சது. 15 நாளில் மொத்த மோசடியும் அம்பலமாகி, பிரசாந்தோட வேலை ஆசையும் கனவோட போச்சு.

போலீஸ் விசாரணையும், தலைமறைவும்

போலீஸ் விசாரணையில், பிரசாந்தோட ஆசையும், விரக்தியும் தெளிவா வெளிப்பட்டது. படிப்புல திறமையா இருந்தாலும், ஆங்கில பேச்சுத் திறனோட பிரச்சனை, இவரை பல இன்டர்வியூக்களில் தோல்வியடைய வச்சிருக்கு.

இந்த சம்பவம் மூலம் இன்ஃபோசிஸ் மாதிரியான நிறுவனங்கள் ஆட்சேர்ப்பு மோசடிகளை எப்படி கையாளுதுன்னு தெரிஞ்சிக்கலாம். சினிமாவில் வரும் காட்சிகளை நம்பி நிஜத்திலும் அப்படித்தான் இருக்கும் போல என்று இன்றைய இளைஞர்கள் நினைத்துவிட வேண்டாம். பிரசாந்தோட கதை, ஒரு பக்கம் சிரிப்பை வரவழைக்கலாம், ஆனா இன்னொரு பக்கம் ஆழமான பாடத்தை சொல்லுது. திறமையை வளர்த்துக்கிட்டு, நேர்மையான வழியில வேலை தேடுறது தான் நீண்ட காலத்துக்கு பலன் தரும். மோசடி முயற்சிகள் ஒரு தற்காலிக வெற்றியை கொடுக்கலாம், ஆனா அதோட விளைவுகள் வாழ்க்கையை பாதிக்கிற அளவுக்கு பெருசா இருக்கும். இளைஞர்கள், தங்களோட பலவீனங்களை ஒத்துக்கிட்டு, அதை மேம்படுத்த முயற்சி பண்ணா, எந்த நிறுவனத்துலயும் நேர்மையா ஒரு இடத்தை பிடிக்க முடியும்.

இது டெக் யுகம் பாஸ்.. அவ்ளோ சீக்கிரம் யாரையும் ஏமாற்றிவிட முடியாது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com